பார்வைத் திறனைப் பாதிக்கும் உயர் இரத்த அழுத்தம்!
உலக மக்களை அச்சுறுத்தும் உயர் இரத்த அழுத்தம் மனிதனின் பார்வைத் திறனைப் பாதிக்கக்கூடிய அபாயம் உள்ளதாக மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
உயர் இரத்த அழுத்த விழித்திரை நோய் எனப்படும் ஒரு நிலைமையே கண்களுக்குச் சேதத்தை ஏற்படுத்துகிறது.
இது, மூளைக்கு ஒளி சமிக்ஞைகளை அனுப்ப உதவும் கண்ணின் பகுதியான விழித்திரையைச் சேதப்படுத்துகிறது.
இரத்த அழுத்தம் சடுதியாக மிக அதிகமாக இருக்கும்போது, அது விழித்திரையில் உள்ள சிறிய இரத்த நாளங்களைச் சேதப்படுத்தும். பின்னர் அவை குறுகுதல், கசிதல் அல்லது உடைந்து போதல் என்பவற்றிற்கு வழிவகுக்கும்.
இதன் விளைவாக, மங்கலான பார்வை ஏற்படலாம். மிகவும் கடுமையான சந்தர்ப்பங்களில் கண்பார்வை இழப்பு (குருட்டுத்தன்மை) கூட ஏற்படலாம் என மருத்துவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
எனவே, உயர் இரத்த அழுத்தம் காலப்போக்கில் கண்களைப் பாதிப்பதைத் தவிர்க்க, இரத்த அழுத்தத்தைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது மிகவும் முக்கியம் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
(வீடியோ இங்கே )
அனுசரணை
