எரிபொருள் அனுமதிப்பத்திரப் பதிவுகளுக்கு வட்ஸ்அப் மூலம் உதவி!

#SriLanka #Fuel #Whatsapp #QRcode #vehicle
Soruban
4 months ago
எரிபொருள் அனுமதிப்பத்திரப் பதிவுகளுக்கு வட்ஸ்அப் மூலம் உதவி!

தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திரத்தில் பதிவு செய்யும் போது சிக்கல்களை எதிர்கொள்ளும் வாகன உரிமையாளர்களுக்காக, அரசாங்க தகவல் திணைக்களம் விசேட வட்ஸ்அப் சேவை ஒன்றினை அறிமுகப்படுத்தியுள்ளது.

பதிவு செய்வதில் உதவி தேவைப்படுபவர்கள் பின்வரும் நடைமுறையைப் பின்பற்றி தமது சிக்கல்களைத் தீர்த்துக்கொள்ள முடியும். வடஸ்அப் இலக்கம்: 076 000 1919 உங்கள் வாகன இலக்கத்தை ஆங்கிலத்தில் தட்டச்சு செய்து அனுப்பவும். (வாகன இலக்கத்தைப் புகைப்படமாக அனுப்ப வேண்டாம்).

வாகன இலக்கத்தை அனுப்பிய பின், அதே இலக்கத்திற்கு பின்வரும் ஆவணங்களின் தெளிவான புகைப்படங்களை அனுப்பவும்:

தேசிய அடையாள அட்டை (NIC)/ ஓட்டுநர் அனுமதிப்பத்திரம் அல்லது கடவுச்சீட்டு

செல்லுபடியாகும் வருமான வரி அனுமதிப்பத்திரம்

வாகனப் பதிவுச் சான்றிதழ்

  • முக்கிய நிபந்தனைகள்

வாகனத்தின் பதிவு செய்யப்பட்ட உரிமையாளர் மட்டுமே இதற்கு விண்ணப்பிக்கத் தகுதியுடையவர்.

நீங்கள் சமர்ப்பிக்கும் அடையாள அட்டை இலக்கம், வாகனப் பதிவுச் சான்றிதழில் உள்ள உரிமையாளரின் இலக்கத்துடன் கட்டாயம் ஒத்துப் போக வேண்டும்.

உங்களது தனிப்பட்ட விபரங்கள் '2022 ஆம் ஆண்டின் 9 ஆம் இலக்க தனிப்பட்ட தரவுப் பாதுகாப்புச் சட்டத்திற்கு' அமையப் பாதுகாக்கப்படும்.

உங்களது விபரங்கள் சரிபார்க்கும் நோக்கத்திற்காக மட்டுமே பயன்படுத்தப்படும். சரிபார்த்தல் முடிந்ததும் வாகன இலக்கத்தைத் தவிர ஏனைய தரவுகள் முறைமையிலிருந்து பாதுகாப்பாக நீக்கப்படும்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4