மெஸ்ஸியின் கண்காட்சி நிகழ்ச்சி - நுழைவு கட்டணங்களை திருப்பி வழங்க உத்தரவு

#India #football #Player #Kolkatta #Fans #Ticket
Prasu
1 month ago
மெஸ்ஸியின் கண்காட்சி நிகழ்ச்சி - நுழைவு கட்டணங்களை திருப்பி வழங்க உத்தரவு

அர்ஜென்டினா கால்பந்து சூப்பர் ஸ்டார் லியோனல் மெஸ்ஸி இன்று கொல்கத்தா வந்தடைந்தார். இந்த சுற்றுப்பயணத்திற்காக மெஸ்ஸி 14 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவிற்கு வருகை தந்துள்ளார்.

மைதானத்திற்கு வருகை தந்த மெஸ்ஸி 10 நிமிடங்களிலேயே அங்கிருந்து வெளியேறியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதனால் கோபமடைந்த ரசிகர்கள் மைதானத்தில் தண்ணீர் பாட்டில்களை எறிந்தும் மேடையை உடைத்தும் வன்முறையில் ஈடுப்பட்டனர்.

இந்நிலையில், மெஸ்ஸி கலந்துகொண்ட நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த நிகழ்ச்சி ஏற்பாட்டாளரை காவல்துறையினர் கைது செய்தனர்.

மேலும் நுழைவு கட்டணத்தை திருப்பித் தருவதாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் உறுதியளித்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!