அருணாச்சலப் பிரதேசத்தில் லாரி பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 18 பேர் மரணம்
#India
#Death
#Accident
#Workers
Prasu
1 hour ago
அஸ்ஸாமில் தினக்கூலி தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற வாகனம் அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள ஒரு பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 18 பேர் உயிரிழந்துள்ளனர்.
சீன எல்லைக்கு அருகிலுள்ள ஹயுலியாங்-சக்லகாம் சாலையில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள ஒரு கட்டுமானப் பணிக்கு 22 தினக்கூலி தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற போதே இவ்வாறு விபத்து ஏற்பட்டுள்ளது.
விபத்தில் 18 உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் மீட்புப் பணி இன்னும் நடந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
(வீடியோ இங்கே )