இந்தியாவில் ஆயிரக்கணக்கான விமானங்கள் இரத்து - காத்திருக்கும் பயணிகள்!
#India
#SriLanka
#Flight
Thamilini
2 hours ago
இந்தியா விமான நிறுவனங்கள் விமான டிக்கெட்டுக்களுக்கான கட்டணங்களை குறைத்துள்ளன.
நாட்டின் மிகப்பெரிய விமான நிறுவனமான இண்டிகோ முந்நூறுக்கும் மேற்பட்ட விமான பயணங்களை இரத்து செய்துள்ளதன் பின்னணியில் இந்த கட்டணங்கள் குறைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
விமானிகளின் பணி நேரத்தைக் கட்டுப்படுத்தும் புதிய விதிகளுக்கு போதுமான அளவு திட்டமிடத் தவறியதால், விமானிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது.
இதன்காரணமாக விமானங்களை இயக்குவதில் பாரிய சிக்கல்களை எதிர்கொண்டுள்ள இண்டிகோ நிறுவனம் ஆயிரக்கணக்கான விமான பயணங்களை இரத்து செய்துள்ளது.
இதனைத் தொடர்ந்து நேற்று விமானநிலையங்களில் பல பயணிகள் காத்திருப்பதை சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ள புகைப்படங்கள் வெளிப்படுத்தியுள்ளன.
(வீடியோ இங்கே )
அனுசரணை
