ரஷ்ய ஜனாதிபதி புட்டினுக்கு பகவத் கீதையை பரிசளித்தார் இந்திய பிரதமர் மோடி

#India #Russia
Mayoorikka
52 minutes ago
ரஷ்ய ஜனாதிபதி புட்டினுக்கு பகவத் கீதையை பரிசளித்தார் இந்திய பிரதமர் மோடி

ரஷ்ய ஜனாதிபதி புட்டினுக்கு பகவத் கீதையை இந்திய பிரதமர் மோடி பரிசளித்துள்ளார். இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் இந்தியா சென்றுள்ளார்.

 தனி விமானம் மூலம் வியாழக்கிழமை (04) இரவு டில்லி வந்த புட்டினை விமான நிலையத்திற்கே நேரில் சென்று இந்திய பிரதமர் மோடி வரவேற்றார். பின்னர் இருவரும் ஒரே காரில் பயணித்தனர். 

இந்திய பிரதமர் இல்லத்தில் புட்டினுக்கு இந்திய பிரதமர் மோடி தனிப்பட்ட இரவு விருந்து அளித்தார். இதனை தொடர்ந்து டில்லியில் நடைபெறும் இந்தியா - ரஷ்யா வருடாந்திர உச்சி மாநாட்டில் இந்திய பிரதமர் மோடியும், ரஷ்ய ஜனாதிபதி புட்டினும் பங்கேற்க உள்ளனர். 

அதேவேளை, இந்த பயணத்தின்போது இந்தியா, ரஷ்யா இடையே முக்கிய ஒப்பந்தங்களை கையெழுத்தாக உள்ளன. இந்நிலையில், ரஷ்ய ஜனாதிபதி புட்டினுக்கு பகவத் கீதையை இந்திய பிரதமர் மோடி பரிசளித்துள்ளார்.

 நேற்றைய தினம் இரவு விருந்துக்குப்பின் புட்டினுக்கு பகவத் கீதையை மோடி பரிசளித்தார். இது தொடர்பாக இந்திய பிரதமர் மோடி வெளியிட்ட எக்ஸ் பதிவில், பகவத் கீதையை ரஷ்ய ஜனாதிபதி புட்டினுக்கு பரிசளித்துள்ளேன். 

கீதையின் போதனைகள் உலகெங்கிலும் உள்ள கோடிக்கணக்கான மக்களுக்கு உத்வேகத்தை அளிக்கின்றன’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

அனுசரணை

images/content-image/1754511373.jpg


உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
சிறப்பு கட்டுரை