இஸ்ரேலிய பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர் நாமா லாசிமி..
இஸ்ரேலிய எதிர்க்கட்சி உறுப்பினர் நாமா லாசிமி (Naama Lazimi) அவர்கள், நாட்டின் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை அவரது முகத்துக்கு நேரே நின்று கொண்டு, ஒவ்வொரு குற்றச்சாட்டையும் தைரியமாக வீசினார்!
“நான் உங்களைக் குற்றம் சாட்டுகிறேன், பெஞ்சமின் நெதன்யாகு…
அக்டோபர் 7 படுகொலைகளுக்கு நீங்களே பொறுப்பு!
மாஸுக்கு நிதி கொடுத்து தீவிரவாதத்தை வளர்த்தீர்கள்!
நாட்டின் பாதுகாப்பை அரசியல் ஆட்டமாக்கினீர்கள்!
உங்கள் தனிப்பட்ட ஊழல் வழக்குகளை மறைக்க கைதிகளை பலிகொடுத்தீர்கள்!
இனவாதத்தை எரியூட்டி யூத சமூகத்தை பிளவுபடுத்தினீர்கள்!
ஆண்டுகளாக இங்கே விஷத்தை ஊற்றிக் கொண்டிருக்கிறீர்கள்!
அவர் கண்ணீருடனும், கோபத்துடனும், ஆதாரத்துடனும் ஒவ்வொரு வார்த்தையையும் அடுக்கினார்.
கேமரா நெதன்யாகுவின் முகத்தை காட்டியது… அவர் அதிர்ந்து போய் அமைதியாக உட்கார்ந்திருந்தார்.
இஸ்ரேலுக்குள்ளேயே இப்படி ஒரு குரல் ஒலிக்கிறது என்றால்…
உலகம் முழுவதும் உண்மை புரிய ஆரம்பித்து விட்டது என்று அர்த்தம். இந்த தைரியமான பெண்ணின் குரல் உலகெங்கும் ஒலிக்கட்டும்! அநீதி எங்கிருந்து வந்தாலும், அதை எதிர்த்து நிற்கும் துணிச்சல் நமக்கும் வேண்டும்.
(வீடியோ இங்கே )
அனுசரணை
