வரலாற்றில் இன்று உலகில் என்னவெல்லாம் நடந்தது? நவம்பர் 26 (November 26)

#people #history #Lanka4 #World
Prasu
3 hours ago
வரலாற்றில் இன்று உலகில் என்னவெல்லாம் நடந்தது? நவம்பர் 26 (November 26)

நவம்பர் 26 (November 26) கிரிகோரியன் ஆண்டின் 330 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 331 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 35 நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்

  • 1161 – சீனாவில் சொங் கடற்படையினர் சின் கடற்படையினருடன் யாங்சி ஆற்றில் பெரும் போரை நிகழ்த்தினர். 
  • 1778 – அவாயித் தீவுகளில் அமைந்துள்ள மாவுய் தீவில் இறங்கிய முதல் ஐரோப்பியர் கப்டன் ஜேம்ஸ் குக். 
  • 1789 – சியார்ச் வாசிங்டனால் அறிவிக்கப்பட்ட தேசிய நன்றியறிதல் நாள் முதற்தடவையாக அமெரிக்காவில் நினைவுகூரப்பட்டது. 
  • 1817 – கொழும்பைப் பெரும் சூறாவளி தாக்கியதில் பல கப்பல்களும், படகுகளும் கடலில் மூழ்கின.
  • 1842 – நோட்ரெ டேம் பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்டது. 
  • 1863 – அரசுத்தலைவர் ஆபிரகாம் லிங்கன் நவம்பர் 26 ஐ தேசிய நன்றியறிதல் நாளாக அறிவித்து, ஆண்டுதோறும் நவம்பர் மாத கடைசி வியாழக்கிழமை கொண்டாடுமாறு பணித்தார்.
  • 1941 முதல் இது நவம்பர் மாதத்தில் நான்காவது வியாழக்கிழமை கொண்டாடப்படுகிறது. 
  • 1918 – மொண்டெனேகுரோவின் நாடாளுமன்றம் செர்பியா இராச்சியத்துடன் இணைய வாக்களித்தது. 
  • 1922 – எகிப்திய பார்வோன் துட்டன்காமுன் என்பவனின் கல்லறைக்குள் ஹவார்ட் கார்ட்டர் மற்றும் கார்னாவன் பிரபு ஆகியோர் சென்றனர். 3000 ஆண்டுகளுக்குப் பின்னர் அதற்குள் சென்ற முதல் மனிதர்கள் இவர்களே. 
  • 1941 – பிரான்சிடமிருந்து லெபனான் ஒருதலைப் பட்சமாக விடுதலையை அறிவித்தது. 
  • 1941 – இரண்டாம் உலகப் போர்: ஆறு யப்பானிய விமானங்கள் தொலைதொடர்புகள் அற்ற நிலையில் யப்பானின் இத்தோகபு குடாவிலிருந்து பேர்ள் துறைமுகத்தை தாக்கியழிக்கப் புறப்பட்டன. 
  • 1942 – நோர்வேயைச் சேர்ந்த 572 யூதர்கள் நாட்சி ஜெர்மனியர்களினால் போலந்தின் ஓஸ்விட்ச் நகரில் உள்ள யூத முகாமுக்கு நாடுகடத்தப்பட்டனர். இவர்களில் 25 பேரே தப்பினர். 
  • 1943 – இரண்டாம் உலகப் போர்: ரோனா என்ற பிரித்தானியக் கப்பல் செருமனியின் வான்படையினரால் நடுநிலப் பகுதியில் வைத்துத் தாக்கியழிக்கப்பட்டது. 
  • 1944 – இரண்டாம் உலகப் போர்: செருமனியின் வி-2 ஏவுகணை ஐக்கிய இராச்சியத்தில் நியூ கிராஸ் வீதியில் உள்ள வுல்வர்த்சு பல்பொருள் அங்காடி மேல் வீழ்ந்ததில் 168 பேர் கொல்லப்பட்டனர். 
  • 1944 – இரண்டாம் உலகப் போர்: செருமனி பெல்ஜியத்தின் ஆண்ட்வெர்ப் நகர் மீது வி-1, வி-2 ஏவுகணைத் தாக்குதல்களை ஆரம்பித்தது. 
  • 1949 – அம்பேத்கர் சமர்ப்பித்த இந்தியாவின் அரசியலமைப்புச் சட்டத்தை இந்திய அரசியலமைப்பு நிர்ணய மன்றம் ஏற்றுக் கொண்டது. 
  • 1950 – கொரியப் போர்: மக்கள் சீனக் குடியரசின் படைகள் வட கொரியாவினுள் நுழைந்து தென் கொரியா மற்றும் ஐநா படைகள் மீது பெரும் தாக்குதலைத் தொடுத்தன. 
  • 1957 – சாதியைப் பாதுகாக்கும் இந்திய அரசியல் சட்டப் பிரிவுகளைத் தீயிடும் போராட்டத்தை தந்தை பெரியார் ஆரம்பித்து வைத்தார். 
  • 1965 – சகாரா பாலைவனத்தில் பிரான்ஸ் ஆஸ்டெரிக்ஸ்-1 என்ற தனது முதலாவது செயற்கைக்கோளை விண்ணுக்கு அனுப்பியது. 
  • 1970 – குவாதலூப்பின் பாசு-தெர் நகரில் ஒரு நிமிடத்தில் பெய்த 1.5 அங்குல மழையே உலகில் இதுவரை பதியப்பட்ட மிகப்பெரும் மழைவீழ்ச்சி ஆகும். 
  • 1983 – இலண்டன் ஹீத்ரோ விமானநிலைய பொதிகள் பாதுகாப்பு அறையில் இருந்து £26 மில்லியன் பெறுமதியான 6,800 தங்கப் பாளங்கள் களவாடப்பட்டன. 
  • 1986 – இரண்டாம் உலகப் போர்க்கால நாட்சிகளின் திரெப்ளிங்கா வதை முகாமின் பாதுகாப்பு அதிகாரி ஜான் தெம்சான்சுக் மீதான விசாரணைகள் எருசலேமில் ஆரம்பித்தன.
  • 1991 – அசர்பைஜான் நாடாளுமன்றம் நகோர்னோ கரபாக் மாகாணத்தின் சுயாட்சி அதிகாரத்தைத் திரும்பப் பெற்று அதன் நகரங்களின் பெயர்களை மூலப் பெயர்களுக்கு மாற்றியது. 
  • 1998 – இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் கன்னா நகரில் இடம்பெற்ற தொடருந்து விபத்தில் 212 பேர் உயிரிழந்தனர். 
  • 1999 – வனுவாட்டுவை 7.5 அளவு நிலநடுக்கம் தாக்கியதில் ஆழிப்பேரலை ஏற்பட்டது. 10 பேர் உயிரிழந்தனர், 40 பேர் காயமடைந்தனர். 
  • 2001 – நேபாளத்தில் மன்னர் கயனேந்திரா அவசரகாலச் சட்டத்தை பிறப்பித்தார். 
  • 2002 – இந்தியாவின் நாகாலாந்து மாநிலத்தில் தனிநாடு கோரும் அமைப்புக்களின் மீதான தடை நீக்கப்பட்டது.
  • 2003 – கான்கோர்டு வானூர்தி சேவை தனது கடைசிப் பயணத்தை இங்கிலாந்தின் பிரிஸ்டல் நகரின் மீது மேற்கொண்டது.
  • 2008 – மும்பாய் நகரில் லஷ்கர்-ஏ-தொய்பா தீவிரவாதிகள் நடத்திய குண்டுத் தாக்குதல்களில் 166 பேர் கொல்லப்பட்டனர், 300 இற்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.
  • 2011 – ஆப்கானித்தானில் நேட்டோ படைகள் பாக்கித்தான் இராணுவ முகாம் மீது தவறுதலாகத் தாக்குதல் மேற்கொண்டதில் 24 பாதுகாப்புப் படையினர் கொல்லப்பட்டனர்.
  • 2011 – செவ்வாய் அறிவியல் ஆய்வுக்கூடம் கியூரியோசிட்டி தரையுளவியுடன் செவ்வாய்க் கோளை நோக்கி ஏவப்பட்டது.
  • 2013 – இலங்கையில் "பயணிகள் காசோலை" வழங்கும் நடைமுறை நிறுத்தப்பட்டது.

பிறப்புகள்

  • 1857 – பேர்டினண்ட் டி சோசர், சுவிட்சர்லாந்து மொழியியலாளர் (இ. 1913)
  • 1890 – சுனிதி குமார் சாட்டர்சி, இந்திய மொழியியலாளர், கல்வியாளர், இலக்கியவாதி (இ. 1977)
  • 1919 – ராம் சரண் சர்மா, இந்திய வரலாற்றாளர் (இ. 2011)
  • 1921 – வர்கீஸ் குரியன், இந்தியப் பொறியியலாளர், தொழிலதிபர் (இ. 2012)
  • 1923 – வி. கே. மூர்த்தி, இந்திய ஒளிப்பதிவாளர் (இ. 2014)
  • 1926 – யஷ் பால், இந்திய அறிவியலாளர் (இ. 2017) 1926 – ரபி ராய், இந்திய அரசியல்வாதி (இ. 2017)
  • 1930 – குருவிக்கரம்பை வேலு, சுயமரியாதை இயக்கத் தலைவர் (இ. 2010)
  • 1933 – கோவிந்த் பன்சாரே, இந்திய இடதுசாரி அரசியல் செயற்பாட்டாளர் (இ. 2015)
  • 1934 – யோசப் பரராஜசிங்கம், இலங்கை அரசியல்வாதி (இ. 2005)
  • 1936 – லலித் அத்துலத்முதலி, இலங்கை அரசியல்வாதி (இ. 1993)
  • 1939 – அப்துல்லா அகுமது பதவீ, மலேசியாவின் 5வது பிரதமர்
  • 1948 – வி. கே. பஞ்சமூர்த்தி, ஈழத்து நாதசுவரக் கலைஞர்
  • 1948 – எலிசபெத் பிளாக்பர்ன், நோபல் பரிசு பெற்ற ஆத்திரேலிய-அமெரிக்க உயிரியலாளர்
  • 1954 – வேலுப்பிள்ளை பிரபாகரன், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் (இ. 2009)
  • 1972 – அர்ஜூன் ராம்பால், இந்திய நடிகர்
  • 1973 – பீட்டர் பாசிநெல்லி, அமெரிக்க நடிகர், இயக்குநர்
  • 1983 – கிரிச் ஹக்ஸ், அமெரிக்கப் பதிப்பாளர், தொழிலதிபர், முகநூலை ஆரம்பித்தவர்
  • 1986 – ஆனந்த் சங்கர், தமிழகத் திரைப்பட இயக்குநர், திரைக்கதையாசிரியர்
  • 1990 – மீரா நந்தன், தென்னிந்தியத் திரைப்பட நடிகை
  • 1990 – ரீட்டா ஓறா, கொசோவா-ஆங்கிலேய பாடகி, நடிகை

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )


உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!