வியட்நாமில் ஏற்பட்ட திடீர் வெள்ளம் - உயிரிழந்தோர் எண்ணிக்கை உயர்வு
#Death
#people
#Flood
#Vietnam
Prasu
1 hour ago
வியட்நாமில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 90 ஆக உயர்ந்துள்ளது.
வெள்ளத்தில் 52,000க்கும் மேற்பட்ட வீடுகள் நீரில் மூழ்கியுள்ளன, மேலும் பல வீடுகளுக்கான மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கனமழை காரணமாக பல வியட்நாமின் மத்திய மலைப் பகுதிகளில் அதிக அளவில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.
ஆயிரக்கணக்கான மக்கள் போக்குவரத்து இன்றி சிரமத்தில் உள்ளனர்.
சமீபத்திய மாதங்களில் கடுமையான வானிலை மற்றும் சூறாவளியால் வியட்நாம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
(வீடியோ இங்கே )