இங்கிலாந்தில் கடும் பனிப்பொழிவு - மக்களின் கவனத்திற்கு!
சமீபத்தில் இங்கிலாந்தில் நேற்று (21) இரவு மிகவும் குளிரான இலையுதிர் கால இரவை அனுபவித்தது.
ஸ்காட்லாந்தில் வெப்பநிலை -12.6 டிகிரி செல்சியஸாக ஒரே இரவில் குறைந்துள்ளதாக வெளிநாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது 15 ஆண்டுகளில் நவம்பர் மாதத்தில் (இலையுதிர்காலத்தில்) பதிவான மிகக் குறைந்த வெப்பநிலையாகக் கருதப்படுகிறது. ஸ்காட்லாந்தைத் தவிர, வேல்ஸில் வெப்பநிலை -7.2C ஆகவும், வடக்கு அயர்லாந்தில் -6C ஆகவும், இங்கிலாந்தில் -6.7C ஆகவும் குறைந்தது.
இதன் விளைவாக, வயதானவர்கள் மற்றும் உடல்நல அபாயம் உள்ளவர்கள் மீது இந்த நிலைமை 'குறிப்பிடத்தக்க தாக்கத்தை' ஏற்படுத்தக்கூடும் என்று சுகாதார அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
இதற்கிடையில், சில பகுதிகளில் பல அங்குல பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இலையுதிர் காலம் நான்கு பருவங்களில் மூன்றாவது பருவமாகும்.
இலையுதிர் காலம் என்பது கோடையில் இருந்து குளிர்காலத்திற்கு மாறுதல் காலம்.
வடக்கு அரைக்கோளத்தில், இந்த காலம் நவம்பரில் தொடங்குகிறது.
(வீடியோ இங்கே )
அனுசரணை
