வங்கதேசத்தில் 5.7 ரிக்டர் அளவில் பதிவான நிலநடுக்கம் - 6 பேர் மரணம்
வங்கதேச தலைநகர் டாக்காவில் இருந்து சுமார் 25 கி.மீ தொலைவில் உள்ள நர்சிங்டி மாவட்டத்தின் கோரஷால் பகுதியில் 5.7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இதில் ஆறு பேர் உயிரிழந்துள்ளனர் எனவும், 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் என்றும் உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இதன் தாக்கம் கொல்கத்தா, மேற்குவங்கம், அசாமின் குவஹாத்தி போன்ற பகுதிகளிலும் உணரப்பட்டுள்ளது. இந்த நில அதிர்வால் மக்கள் அச்சமடைந்து வீடுகளிலிருந்து வெளியேறி சாலைகளில் தஞ்சமடைந்தனர்.

------------------------------------------------------------------------------------
A 5.7 magnitude earthquake has struck the Korashal area of Narsingdi district, about 25 km from the capital Dhaka, Bangladesh.
Local media reports say six people have died and more than 10 have been injured.
Its impact was also felt in parts of Kolkata, West Bengal, and Guwahati in Assam. The tremors sent people fleeing their homes and taking shelter on the roads.
------------------------------------------------------------------------------------
බංග්ලාදේශයේ අගනුවර වන ඩකා සිට කිලෝමීටර් 25 ක් පමණ දුරින් පිහිටි නර්සිංඩි දිස්ත්රික්කයේ කොරාෂාල් ප්රදේශයට 5.7 ක භූමිකම්පාවක් සිදුවී ඇත.
ප්රාදේශීය මාධ්ය වාර්තා පවසන්නේ පුද්ගලයින් හය දෙනෙකු මිය ගොස් 10 කට වැඩි පිරිසක් තුවාල ලබා ඇති බවයි.
එහි බලපෑම කොල්කටා, බටහිර බෙංගාලය සහ ඇසෑම් හි ගුවහාටි යන ප්රදේශවලට ද දැනී ඇත. මෙම භූ කම්පන හේතුවෙන් මිනිසුන් තම නිවෙස්වලින් පලා ගොස් මාර්ගවල නවාතැන් ගෙන සිටියහ.
(வீடியோ இங்கே )