அமெரிக்காவிற்கு வருகை தந்த சவுதி இளவரசர் - கஷோகியின் கொலை விவகாரத்தில் முரண்பட்டு நிற்கும் ட்ரம்ப்!
ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக வெள்ளை மாளிகைக்கு சவுதி இளவரசர் முகமது பின் சல்மான் வருகை தந்துள்ளார்.
2018 ஆம் ஆண்டு பத்திரிகையாளர் ஜமால் கஷோகியின் கொலையில் சவுதி இளவரசர் முகமது பின் சல்மானுக்கு தொடர்பு இருப்பதாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் எந்தத் தொடர்பும் இல்லை என்று மறுத்துள்ளார், அதே நேரத்தில் இதுபோன்ற தவறு மீண்டும் நடக்காமல் பார்த்துக் கொள்வதாக இளவரசர் சல்மான் கூறியுள்ளார்.
இருப்பினும், 2018 ஆம் ஆண்டு இஸ்தான்புல்லில் உள்ள சவுதி தூதரகத்தில் கஷோகியின் மரணத்திற்கு வழிவகுத்த நடவடிக்கைக்கு இளவரசர் ஒப்புதல் அளித்ததாக முடிவு செய்த 2021 அமெரிக்க உளவுத்துறை மதிப்பீட்டிற்கு டிரம்பின் கருத்துக்கள் முரணாக இருப்பதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இந்த விஜயத்தின் போது, பாதுகாப்பு கொள்முதல், சிவில் அணுசக்தி ஒத்துழைப்பை மேம்படுத்துதல் மற்றும் செயற்கை நுண்ணறிவுத் துறையில் பாரிய முதலீடுகளைச் செய்தல் போன்ற துறைகளில் இரு நாடுகளுக்கும் இடையே ஒப்பந்தங்கள் எட்டப்படும் என்று வெளிநாட்டு தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.
(வீடியோ இங்கே )
அனுசரணை
