பாடசாலை நேர நீட்டிப்பு: முகங்கொடுக்க வேண்டிய சவால்கள்!
இன்று பல பாடசாலைகள் பிற்பகல் 1.30 மணிக்கு முடிவடைகின்றன. ஆனால் சில பாடசாலைகள், குறிப்பாக துணுக்காய், வலயப் பாடசாலைகள், இஸ்லாமியப் பாடசாலைகள் ஏற்கனவே இரண்டு மணிக்கு தான் நிறைவடைகிறது.
அரசோ இன்னும் நேரத்தை 30 நிமிடம் நீட்டித்து 2.30 மணிக்கு முடிவு செய்ய முயற்சிக்கின்றது. இது ஒரு சிறிது நேர மாற்றம் போல தோன்றினாலும், உண்மையில் இது மாணவர்களின் தினசரி வாழ்க்கை, பெற்றோர்களின் திட்டங்கள், ஆசிரியர்களின் பொறுப்புகள் மீது பெரிய தாக்கம் ஏற்படுத்துகிறது:
மாணவர்கள் – சிலருக்கு மதிய உணவு போதுமான நேரத்தில் கிடைக்காமல், வெப்பம் மற்றும் போக்குவரத்து பிரச்சினைகள் உள்ள சூழலில் கூட நேரம் நீட்டிப்பது கடினம். சில மாணவர்கள் வீடு திரும்பும் நேரம் மாற்றப்படுவதால் பெற்றோர்களுடன் சேர்ந்து உணவு உண்பதற்கும், ஓய்வெடுப்பதற்கும் நேரம் குறைகிறது.
ஆசிரியர்கள் – தூரத்திலிருந்து வருபவர்கள், ஏற்கனவே கடினமான வேலை நேரத்துடன் கூட, கூடுதல் 30 நிமிடம் பாடசாலையில் இருக்க வேண்டிய நிலை. இது அவர்களின் உயிர்வாழ்க்கை, குடும்ப பொறுப்புகள், சுய வாழ்க்கை மீதுள்ள ஆர்வத்தை குறைக்கும்.
(வீடியோ இங்கே )
அனுசரணை
