சிங்கப்பூரில் திடீரென அதிகரித்துள்ள சளிக்காய்ச்சல் - மக்களுக்கு எச்சரிக்கை
சிங்கப்பூரில் திடீரென சளிக்காய்ச்சல் பரவல் அதிகரித்துள்ளமை மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
வழக்கமாக, ஒவ்வொரு வருடமும் டிசம்பர் மாதம் முதல் மார்ச் மாதம் வரையான காலப்பகுதியிலேயே இந்தக் காய்ச்சல் சம்பவங்கள் கணிசமாக அதிகரிக்கின்றன.
எனினும் இம்முறை வழமையை விட நோய்த் தொற்று முன்கூட்டியே மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தி வருவதாக சுகாதாரத் தரப்பினர் தெரிவிக்கின்றனர்.
இந்த நிலைமை சிங்கப்பூரில் மட்டும் இல்லை. அண்டை நாடுகளான ஜப்பான், மலோசியா போன்ற நாடுகளில் காணப்படுவதாக மருத்துவ அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
சளிக்காய்ச்சலுடன் மருத்துவரை நாடிச் செல்லும் மக்களின் எண்ணிக்கை சுமார் 10 வீதம் வரை அதிகரித்துள்ளதாக மருந்தகங்கள் தெரிவித்துள்ளன. இதனால்,அங்கு வழக்கத்தை விடக் கூடுதலான கூட்டம் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனைக் கருத்திற்கொண்டு, பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறு மருத்துவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

------------------------------------------------------------------------------------
A sudden increase in the spread of cold and flu in Singapore has caused fear among the public.
Usually, the cases of this flu increase significantly between December and March every year.
However, health officials say that this time the infection is affecting people earlier than usual.
This situation is not unique to Singapore. Medical officials have pointed out that it is also seen in neighboring countries such as Japan and Malaysia.
Pharmacies have reported that the number of people seeking medical attention with cold and flu has increased by about 10 percent. Due to this, it is reported that there are more crowds than usual there.
Considering this, doctors have urged the public to be vigilant.
------------------------------------------------------------------------------------
සිංගප්පූරුවේ සෙම්ප්රතිශ්යාව සහ උණ පැතිරීමේ හදිසි වැඩිවීමක් මහජනතාව අතර භීතියට හේතු වී තිබේ.
සාමාන්යයෙන්, සෑම වසරකම දෙසැම්බර් සහ මාර්තු අතර මෙම උණ රෝගීන් සැලකිය යුතු ලෙස වැඩි වේ.
කෙසේ වෙතත්, සෞඛ්ය නිලධාරීන් පවසන්නේ මෙවර ආසාදනය වෙනදාට වඩා කලින් මිනිසුන්ට බලපාන බවයි.
මෙම තත්ත්වය සිංගප්පූරුවට පමණක් ආවේණික නොවේ. ජපානය සහ මැලේසියාව වැනි අසල්වැසි රටවල ද එය දක්නට ලැබෙන බව වෛද්ය නිලධාරීන් පෙන්වා දී ඇත.
සෙම්ප්රතිශ්යාව සහ උණ සමඟ වෛද්ය ප්රතිකාර ලබා ගන්නා පුද්ගලයින්ගේ සංඛ්යාව සියයට 10 කින් පමණ වැඩි වී ඇති බව ෆාමසි වාර්තා කර ඇත. මේ හේතුවෙන්, එහි සාමාන්යයට වඩා වැඩි පිරිසක් සිටින බව වාර්තා වේ.
මෙය සැලකිල්ලට ගනිමින්, වෛද්යවරුන් මහජනතාවගෙන් විමසිලිමත් වන ලෙස ඉල්ලා තිබේ.
(வீடியோ இங்கே )