மறு அறிவிப்பு வரும் வரை எந்த நிகழ்ச்சிகளையும் நடத்த வேண்டாம்: விஜய் அறிவிப்பு

மறு அறிவிப்பு வரும் வரை, தவெக சார்பில் எந்த நிகழ்ச்சிகளையும் நடத்த வேண்டாமென மாவட்ட நிர்வாகிகளுக்கு கட்சித் தலைவர் விஜய் அறிவுறுத்தியதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
கரூரில் நடைபெற்ற விஜயின் பரப்புரைக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
கரூரில் பாதிக்கப்பட்டவர்களை விஜய் சந்திக்க ஏதுவாக அவர்களின் விவரங்களை தவெக தலைமை அலுவலகத்திற்கு மாவட்ட நிர்வாகிகள் அனுப்பியதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், கட்சி தலைமையிடமிருந்து மறு அறிவிப்பு வரும் வரை தவெக சார்பில் எந்த நிகழ்ச்சிகளையும் நடத்த வேண்டாம் என மாவட்ட நிர்வாகிகளுக்கு விஜய் அறிவுறுத்தியாக தகவல் வெளியாகி உள்ளது.
இதனிடையே, சென்னை பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்தில் ஆயுத பூஜை கொண்டாடப்பட்டுள்ளது. விஜயின் பரப்புரை வாகனம் உட்பட 2 வாகனங்களுக்கு மாலை அணிவித்து, வாழைக்கன்று கட்டி பூஜை செய்யப்பட்டுள்ளது.
(வீடியோ இங்கே )
அனுசரணை



