மோட்டார் சைக்கிள் காருடன் நேருக்கு நேர் மோதி விபத்து; இளைஞன் பலி!
தலங்கம பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கொள்ளுப்பிட்டி - கடுவெல வீதியின் தலஹேன பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தலங்கம பொலிஸார் தெரிவித்தனர். மாலம்பேயிலிருந்து கொஸ்வத்தை நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிள் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து, எதிர் திசையில் பயணித்த காருடன் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் காயமடைந்த மோட்டார் சைக்கிள் செலுத்துனரும் மற்றுமொருவரும் கொஸ்வத்தை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மோட்டார் சைக்கிள் செலுத்துனர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். விபத்தில் உயிரிழந்தவர் பத்தரமுல்லை ஸ்ரீ சுபூதிபுரத்தைச் சேர்ந்த 21 வயதுடைய இளைஞர் என தெரியவந்துள்ளது.

காயமடைந்த மற்றைய நபர் மேலதிக சிகிச்சைகளுக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
உயிரிழந்தவரின் சடலம் கொஸ்வத்தை வைத்தியசாலையின்; பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை தலங்கம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
(வீடியோ இங்கே )
அனுசரணை
