விஜயின்பிரச்சார கூட்டம் - கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை உயர்வு!

கரூரில் சனிக்கிழமை இரவு 7 மணியளவில் நடைபெற்ற தவெக தலைவர் விஜய்யின் பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்டநெரிசலில் சிக்கி 9 குழந்தைகள் உள்பட 39 பேர் பலியாகியுள்ளனர்.
பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து, உடனடியாக சென்னையில் இருந்து நள்ளிரவு 1 மணியளவில் தனிவிமானம் மூலம் புறப்பட்ட முதல்வர் ஸ்டாலின், திருச்சி விமான நிலையத்துக்கு வந்தடைந்தார்.
அங்கிருந்து சாலை வழியாக கரூருக்கு காரில் புறப்பட்ட முதல்வர், ஒன்றரை மணிநேரப் பயணத்துக்குப் பிறகு அதிகாலை 3 மணியளவில் கரூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு வந்தடைந்தார்.
முதலில் பிணவறையின் வெளியே வைக்கப்பட்டிருந்த சடலங்களுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்திய முதல்வர், அவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.
அதிகாலை 3.50 மணியளவில் செய்தியாளர்களைச் சந்தித்த முதல்வர் ஸ்டாலின் பேசிய போது விஜய் கைது செய்யப்படுவாரா? என்ற கேள்விக்கு, ”அரசியல் நோக்கத்தோடு எதுவும் கூறவிரும்பவில்லை. ஆணையத்தின் விசாரணையின் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்று முதல்வர் பதிலளித்தார்.
(வீடியோ இங்கே )
அனுசரணை



