பிரித்தானியாவில் அறிமுகப்படுத்தப்படவுள்ள டிஜிட்டல் அடையாள அட்டை சேவை

#PrimeMinister #Digital #England #National Identity Card
Prasu
2 hours ago
பிரித்தானியாவில் அறிமுகப்படுத்தப்படவுள்ள டிஜிட்டல் அடையாள அட்டை சேவை

புலம்பெயர்தலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் அடுத்த கட்டமாக, பிரித்தானியர்களுக்கு டிஜிட்டல் அடையாள அட்டைகளை வழங்குவது குறித்து பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் அறிவிப்பு வெளியிட இருக்கிறார்.

இன்னும் சில நாட்களில் பிரித்தானியர்களுக்கு டிஜிட்டல் அடையாள அட்டைகளை வழங்குவது குறித்த அறிவிப்பை ஸ்டார்மர் வெளியிட இருப்பதாக செய்திகள் வெளியாகிவருகின்றன. 

கூடுமானவரையில், இம்மாதம், அதாவது, செப்டம்பர் மாதம் 28ஆம் திகதி வாக்கில், டிஜிட்டல் அடையாள அட்டை குறித்த அறிவிப்பை பிரதமர் வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஸ்டார்மரைப் பொருத்தவரை, இந்த டிஜிட்டல் அடையாள அட்டைகள், சட்டவிரோதமாக பிரித்தானியாவுக்கு வர விரும்பும் புலம்பெயர்வோருக்கு தயக்கத்தை ஏற்படுத்துவதில் முக்கிய பங்காற்றக்கூடும் என அவர் நம்புகிறார்.

குறிப்பாக, இந்த டிஜிட்டல் அடையாள அட்டைகள், ஒருவருக்கு பிரித்தானியாவில் பணி செய்ய உரிமை உள்ளதா என்பதை சோதிக்கவும், வீடு வாடகைக்கு எடுக்க ஒப்பந்தம் செய்வதற்கான உரிமை உள்ளதா என்பதை சோதிக்கவும் பயன்படுத்தப்படக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!