சீர்கேடுடன் இயங்கிய இரு உணவகங்களுக்கு சீல் ..

#SriLanka #Kilinochchi #ADDA #shelvazug #ADDAADS #SHELVA #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA
Lanka4
3 hours ago
சீர்கேடுடன் இயங்கிய இரு உணவகங்களுக்கு  சீல் ..

நாச்சிக்குடா பகுதியில் சுகாதார சீர் கேட்டுடன் இயங்கிவந்த இரண்டு உணவு கடைகள் கிளிநொச்சி நிதிமன்றத்தின் கட்டளையோடு தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. கிளிநொச்சி முழங்காவில் பொதுசுகாதார பரிசோதகர் பிரிவிற்குட்பட்ட நாச்சிக்குடா பகுதியில் சீர் கேட்டுடன் இயங்கிவந்த இரு உணவகங்களுக்கும் 65,000 ரூபா தண்டப் பணம் விதிக்கப்பட்டதுடன் இரண்டு உணவகம் நேற்றிலிருந்து (11) தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.


images/content-image/2024/08/1757659447.jpg


மேற்பார்வைப் பொது சுகாதார பரிசோதகர் றெணால்ட், பொது சுகாதார பரிசோதகர்களான மு.ஜெனோயன், தளிர்ராஜ் இ. தர்மிகன் ஆகியோர் இணைந்த குழு செயற்பாட்டில் இரு உணவகங்களும் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிவந்தமை இனங்காணப்பட்டிருந்தது. அதனையடுத்து குறித்த பிரச்சினைக்கு எதிராக முழங்காவில் பொது சுகாதார பரிசோதகர் இ. தர்மிகனால் கிளிநொச்சி நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

அதற்கமைவாக கிளிநொச்சி நீதிமன்ற நீதவானால் இரு உணவகங்களுக்கும் 65,000 ரூபா தண்டப் பணம் விதிக்கப்பட்டதுடன் சீர்கேடுகளை நிவர்த்தி செய்யும் வரை இரண்டு உணவகமும் தற்காலிகமாக மூடுமாறும் கட்டளையிடப்பட்டிருப்பது குறிப்பிடதக்கது.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே அழுத்தவும்)

அனுசரணை

images/content-image/1754511373.jpg




உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!