கிளிநொச்சியில் மலக்கழிவுடன் கூடிய குழாய் குடிநீர் விநியோகம்

கிளிநொச்சி பொது வைத்தியசாலையின் கழிவுகள் உற்பட அங்கிருந்து வடக்காக காக்கா கடை சந்திவரையுள்ள பொது நிறுவனங்கள் கடைகள் எரிபொருள் நிரப்பு நிலையங்களின் கழிவுகள் அனைத்தும் கிளிநொச்சி குளத்தில் விடப்படுவதாக உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இறுதியாக நடந்த மாவட்ட அபிவிருத்தி குழுக்கூட்டத்தில் (D.c.c) பொறுப்பு வாய்ந்த திணைக்கள அதிகாரி ஒருவர் இது பற்றிய ஆதாரங்களுடன் அறிக்கை வெளியிட்டதாகவும் கூறப்படுகிறது.
எனினும் இந்த விடயத்தில் கவனம் செலுத்தவேண்டிய எந்தவொரு திணைக்களமும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இப்பொழுது எமது மக்கள் மலம் கலந்த நீரை பாவித்து வருகிறார்கள்.
கிளிநொச்சி நகரிலுள்ளபல உணவகங்களில் இந்த நீரே பயன்படுத்தப்படுவதாக அறியமுடிகிறது. இது தொடர்பில் சட்ட நடவடிக்கைக்கு வாய்ப்பில்லையா..?
மனித உரிமை அமைப்புகளின் கவனத்திற்கு கொண்டு வாருங்கள் Dccயின்தலைவர் அவர்களே மக்கள் பிரதிநிதிகளே திணைக்கள தலைவர்களே நகரக்கழிவு, மலக்கழிவு இல்லாத குடிநீர் கிளிநொச்சி மக்களுக்கு கிடைப்பது எப்போது...?
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



