பிரித்தானியாவில் கார் விபத்தில் இரு இந்திய மாணவர்கள் உயிரிழப்பு

#Death #Accident #students #England #Indian
Prasu
2 months ago
பிரித்தானியாவில் கார் விபத்தில் இரு இந்திய மாணவர்கள் உயிரிழப்பு

பிரித்தானியாவில் நிகழ்ந்த கார் விபத்தொன்றில் இந்திய மாணவர்கள் இருவர் பலியாகியுள்ளார்கள், ஐந்து பேர் காயமடைந்துள்ளார்கள். இங்கிலாந்திலுள்ள எசெக்ஸில் இந்த துயர சம்பவம் நிகழ்ந்துள்ளது.

இரண்டு கார்கள் ஒன்றுடன் மற்றொன்று மோதிய அந்த விபத்தில், ஒரு காரில் பயணித்த 23 வயது சைதன்யா மற்றும் 21 வயது ரிஷிடேஜா என்னும் இருவர் உயிரிழந்துள்ளார்கள்.

உயர் கல்வி கற்பதற்காக எட்டு மாதங்களுக்கு முன்புதான் பிரித்தானியா வந்த சைதன்யா சம்பவ இடத்திலேயே உயிரிழக்க, ரிஷிடேஜா மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

காரில் பயணித்த மேலும் ஐந்து மாணவர்கள் லண்டன் ராயல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களில் மேலும் இருவர் ஆபத்தான நிலையில் உள்ளனர்.

கார்களை ஓட்டிய கோபிசந்த் மற்றும் மனோகர் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்கள். எதனால் விபத்து நடந்தது என்பதை அறிவதற்காக விசாரணை ஒன்று துவக்கப்பட்டுள்ளது.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே அழுத்தவும்)

அனுசரணை

images/content-image/1754511373.jpg

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!