பாலியல் மற்றும் போதைப்பொருள் குற்றச்சாட்டில் பதவி விலகிய பிரித்தானிய எம்.பி மரணம்

பாலியல் மற்றும் கோகோயின் புகார்களால் அரசியலை விட்டு விலகிய , பிரித்தானிய முன்னாள் எம்.பி டேவிட் வார்பர்டன் (David Warburton) 59 வயதில் திடீரென மரணமடைந்துள்ளார்.
டேவிட் வார்பர்டனின் செல்சியா அடுக்குமாடி குடியிருப்புக்கு விரைந்த மருத்துவக் குழுவினரால், அவர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளார். இவரது மரணம் குறித்து எந்த சந்தேகமும் இல்லை என காவல்துறை தெரிவித்துள்ளது.
டேவிட் வார்பர்டன் , மே 2015 முதல் ஜூன் 2023 வரை சோமர்செட் மற்றும் ஃப்ரோம் நாடாளுமன்ற உறுப்பினராக பணியாற்றியுள்ளார். அவரது மரணம் எதிர்பாராத ஒன்று என காவல்துறை தெரிவித்துள்ளது.
ஏப்ரல் 2022-ல், பாலியல் துன்புறுத்தல் மற்றும் போதைப்பொருள் பயன்பாடு தொடர்பான குற்றச்சாட்டுகளுக்குப் பிறகு, வார்பர்டன் டோரி கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.
ஊடகங்களில் அவர் ஒரு மேசையில் வெள்ளை நிறப் பொடியுடன் அமர்ந்திருக்கும் படத்தை வெளியிட்டது. நாடாளுமன்றத்தின் சுயாதீன புகார்கள் மற்றும் குறைதீர்ப்புத் திட்டம் (ICGS) இது குறித்து விசாரணை நடத்தியது.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



