கிளிநொச்சியில் ஏ9 வீதியில் ஏற்பட்ட விபத்தில் இருவர் பலி!

கிளிநொச்சி ஏ9 வீதியில் கரபோக்கிற்கும் பரந்தன் சந்திக்கும் இடையில் இன்று(29) அதிகாலை சுமார் 5.30 மணியளவில் ஏற்பட்ட விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியானதோடு, மற்றுமொருவர் படுகாயம் அடைந்து கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணத்திலிருந்து நுவரெலியா நோக்கி பயணித்த அரச பேரூந்து பரந்தன் அரச விதை உற்பத்தி நிலையத்திற்கு முன்பாக உள்ள தரிப்பிடத்தில் நிறுத்திய போது பின்னால் வந்த ரிப்பர் வாகனம் வேக கட்டுப்பாட்டை இழந்து பேரூந்துடன் மோதி விபத்துக்குள்ளானது. இதே வேளை ரிப்பருக்கு பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் வேக கட்டுப்பாட்டை இழந்து ரிப்பருடன் மோதி விபத்துக்குள்ளானது.
இதன் போது மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவர் சம்பவ
.இடதிலேயே பலியானதுடன் மற்றுமொருவர் படுகாயம் அடைந்து கிளிநொச்சி
வைத்தியசாலை அனுமதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்.
மோட்டார் சைக்கிளில் பயணித்தவர்களிடம் கசிப்பு காணப்பட்டதாக தெரிவித்தபொலீஸார். காயமடைந்து காணப்பட்டவரை அவசர நோயாளர் காவு வண்டிக்கு அறிவி்த்து வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர்.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



