வெளிநாடொன்றில் உயிருக்கு போராடும் இரு பிரித்தானிய பெண்கள்
#Accident
#Women
#Hospital
#England
#Spain
Prasu
2 hours ago

ஸ்பெயினின் இபிஸா தீவில் பிரித்தானிய இளம்பெண்கள் இருவர் விபத்தில் சிக்கியதால் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர். பிரித்தானியாவைச் சேர்ந்த 26, 27 வயது பெண்கள் இருவர் ஸ்பெயினின் இபிஸா (Ibiza) தீவுக்கு சுற்றுலாவுக்கு சென்றுள்ளனர்.
துரதிர்ஷ்டவசமாக, வாகனம் ஒன்று மோதியதில் இருவரும் படுகாயமடைந்தனர். கான் கில்லெமோ என்று அழைக்கப்படும் பகுதியில் இந்த நிகழ்வு நடந்துள்ளது.
குறித்த பெண்கள் இருவருக்கும் மூளையில் காயங்கள் மற்றும் எலும்பு முறிவுகள் ஏற்பட்டதால், அவர்களது நிலைமை மோசமாக உள்ளதாக கூறப்படுகிறது.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



