கிளிநொச்சி வைத்தியசாலையில் பெண் நோயியல் பிரிவு செயலிழக்கும் ஆபத்தில்?

நெதர்லாந்து அரசின் நிதி உதவியில் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலை வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள வடக்கு மாகாண பெண் நோயியல் மருத்துவமனையின் செயற்பாடுகள் ஆரம்பிக்கும் முன்னமே அதனை செயலிழக்கச் செய்யும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அக்கறையுள்ள வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
குறித்த வைத்தியசாலையில் நெதர்லாந்து அரசின் உதவியில் வழங்கப்பட்டுள்ள மருத்துவ உபகரணங்களில் ஸ்கான் இயந்திரம், மயக்க மருந்து இயந்திரம், மார்பக புற்றுநோயை கண்டறியும் இயந்திரம் என்பவற்றை கிளிநொச்சியிலிருந்து அநுராதபுரம் உள்ளிட்ட வேறு வைத்தியசாலைகளுக்கு மாற்றுவதற்கான நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன.
இந்த உபகரணங்கள் இங்கிருந்து மாற்றப்பட்டால் அதனை மீளவும் கிளிநொச்சிக்கு பெற்றுக்கொள்ள முடியாது.
எனவே அதனை காரணம் காட்டி இங்கு அமைக்கப்பட்டுள்ள வடக்கு மாகாண பெண் நோயியல் மருத்துவமனையை செயலிழக்க செய்துவிடலாம். அவ்வாறு நடந்தால் அது கிளிநொச்சிக்கு மட்டுமல்ல வடக்கு மாகாண மக்களுக்கு மிகப்பெரிய இழப்பாகும் வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் சமன்பத்திரன, கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அசேல திசாநாயக்க, கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலை பணிப்பாளர் பிரபாத் வீரவத்த ஆகியோர் தங்களுக்கு மேலிடத்து அழுத்தம் எனக் கூறி இந்த இயந்திரங்களை மாற்றும் முயற்சியில் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
எங்கப்பா எங்கட எம்பிமார், தம்பிமார், மண்ணின் மைந்தர்கள் எல்லாம்? ஐயாக்களே போன பிறக்கு அதை வைத்து அரசியல் செய்யாமல் போக முன் காப்பாற்றும் வழியை பாருங்கோ
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



