உயிர் காக்கும் பணியில் இணைய நீங்கள் தயாரா? அப்படியானால் எங்களோடு இணையுங்கள்

இலங்கை முன் மருத்துவமனை பராமரிப்பு சேவையில் பெருமைமிக்க பிரதிநிதியாகும்.
தேசிய அவசர ஆம்புலன்ஸ் சேவை மனநல சுகாதார மற்றும் ஊடக அமைச்சின் கீழ் இயங்கும் நிறுவனம் தற்போது நாடளாவிய ரீதியில் 322 ஆம்புலன்ஸ்களுடன் உயிர் காக்கும் பணியில் மிகவும் வெற்றிகரமாக ஈடுபட்டு வருகின்றது.
இந்த பணியில் இணைவதற்கு 35 வயதுக்கு உட்பட்டவர் ஆக இருத்தல் வேண்டும் கா.பொ .த உயர்தர பரீட்சையில் உயிரியல் கணிதம் வேளாண்மை ஆகிய பிரிவுகளில் தேர்ச்சி பெற்றிருத்தல் அல்லது கா.பொ த உயர்தர பரிட்சையில் வணிகம் /கலை /தொழில்நுட்ப பிரிவில் தேர்ச்சி பெற்றிருத்தல்,
உடற் கல்வி சேவை சார்ந்த படிப்பை படித்திருத்தல் வேண்டும். ஆங்கில மொழியில் தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும், அவசர மருத்துவ சேவையில் முந்தைய அனுபவம் கூடுதல் தகுதியாக கருதப்படும்.
விண்ணப்பதாரர்கள் அடிப்படை திறன் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் களனி பல்கலைக்கழகத்துடன் இணைந்து தேசிய அவசர ஆம்புலன்ஸ் சேவையால் வழங்கப்படும் சிறப்பு பயிற்சிக்கு பிறகு களனி பல்கலைக்கழகத்தால் வழங்கப்படும் டிப்ளமோ சான்றிதழ் மற்றும் அதனைத் தொடர்ந்து மூன்று வருட சேவை காலத்திற்கு பின் பல வெளிநாட்டு வேலை வாய்ப்புகள் காத்திருக்கும் என்பதனை இதன் மூலம் தெரிவித்துக் கொள்கின்றோம்
குறைந்தபட்ச தகுதிகளை நீங்கள் பூர்த்தி செய்து இருப்பின் உங்கள் விண்ணப்பத்தை careers@1990.lk என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அல்லது தபால் மூலம் 30. 9. 2025 அன்று அல்லது அதற்கு முன்னர் அனுப்பவும்



