அஞ்சல் ஊழியர்களின் வேலைநிறுத்த போராட்டம் இன்றும் தொடர்கிறது!
#SriLanka
#strike
#Postal
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Thamilini
3 months ago
அஞ்சல் ஊழியர்கள் ஆரம்பித்துள்ள தொடர்ச்சியான தொழிற்சங்க நடவடிக்கை இன்று (20) மூன்றாவது நாளாகவும் தொடரும் என்று அஞ்சல் மற்றும் தொலைத்தொடர்பு அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
அமைச்சருடன் முறையான கலந்துரையாடல் கோரி வேலைநிறுத்தம் முன்னெடுக்கப்படுவதாக அதன் தலைவர் ஜி.ஜி.சி. நிரோஷனா தெரிவித்தார்.
கைரேகை இயந்திரம் நிராகரிக்கப்பட்டது தொடர்பான குற்றச்சாட்டுகள் முற்றிலும் தவறானவை என்றும் ஜி.ஜி.சி. நிரோஷனா கூறினார்.
இருப்பினும், இந்த விடயம் குறித்து கருத்து தெரிவித்த துணை அஞ்சல் மா அதிபர் சமீஷா டி சில்வா, வேலைநிறுத்தத்திற்கான காரணம் கைரேகை இயந்திரத்தை செயல்படுத்துவதே என்று கூறுகிறார்.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை
