15 வயது சிறுமியின் வயிற்றில் இருந்து அகற்றப்பட்ட 2 கிலோ முடி
#China
#children
#Hair
#Stomach
#Surgery
Prasu
2 hours ago

சீனாவில் சிறுமியின் வயிற்றுவலியால் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டபோது, அவரது வயிறிலிருந்து 2 கிலோ எடையுள்ள முடி அகற்றப்பட்டது. நிநி என்ற 15 வயதுடைய சிறுமி 1.6 மீட்டர் உயரம் மற்றும் 35 கிலோ எடையுடன் காணப்பட்டுள்ளார்.
அவர் கடந்த ஆறு ஆண்டுகளாகவே முடியைப் பிடுங்கி உண்ணும் பழக்கத்தில் இருந்ததாக அவரது தாயார் தெரிவித்தார். இதனால், அவரது வயிறு இருமடங்கு வீங்கி, கடுமையான வலி ஏற்பட்டது.
மருத்துவ பரிசோதனைகளில், பல உடல்நலப் பிரச்சனைகள் இருப்பது கண்டறியப்பட்டது. அவருக்கு சிகிச்சையுடன், மனநல ஆலோசனையும் வழங்கப்பட்டு, குணமடைந்த பின்னர் வீடு திரும்பினார்.
பிள்ளைகள் உணவு அல்லாத பொருள்களை உட்கொள்கிறார்கள் எனக் கவனித்தால், பெற்றோர் உடனடியாக மருத்துவ ஆலோசனை பெற வேண்டும் என நிபுணர்கள் அறிவுறுத்துகிறார்கள்.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



