விரைவில் சைபர் பாதுகாப்பு சட்ட மூலத்துக்கான பரிந்துரைகளை வழங்க குழு நியமனம்!

சைபர் பாதுகாப்பு சட்டமூலத்துக்கான பரிந்துரைகளை வழங்குவதற்காக குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது. சட்ட மா அதிபர் திணைக்களத்தின் மேற்பார்வையின் கீழ், ஜனாதிபதியின் அறிவுறுத்தல்களுக்கு அமைய இந்தக் குழு நியமிக்கப்பட்டுள்ளது.
சைபர் பாதுகாப்பு தொடர்பில் அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ள இரண்டு நிறுவனங்கள் தொடர்பான சட்டமூலங்களை இந்தக் குழு ஆய்வு செய்து பரிந்துரைகளை வழங்கும் என, டிஜிட்டல் பொருளாதார விவகாரங்களுக்கான பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன தெரிவித்துள்ளார். தேசிய பாதுகாப்பைப் பாதிக்கும் சைபர் பாதுகாப்பு தொடர்பான வரைவு சட்ட மூலமும் பொது மற்றும் தனியார் நிறுவனங்களில் சைபர்பாதுகாப்பு தொடர்பான வரைவு சட்டமூலமும் இந்தக் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் தயாரிக்கப்படும் என அவர் கூறியுள்ளார்.
அத்துடன், குறித்த இரண்டு சட்டமூலங்களுடன் தொடர்புடைய அதிகாரங்களை செயல்படுத்தவும் அவற்றை ஒழுங்குபடுத்தவும், இரண்டு நிறுவனங்களை நிறுவுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக பிரதி அமைச்சர் கூறியுள்ளார்.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



