செஞ்சோலை மாணவிகள் படுகொலை – 19ம் ஆண்டு நினைவேந்தல்

செஞ்சோலை வளாகத்தில் மாணவிகள் மீதான விமானக்குண்டு வீச்சில் படுகொலை செய்யப்பட்டவர்களை நினைவுகூர்ந்து நினைவேந்தல் முன்னெடுப்பு!
2006ம் ஆண்டு ஓகஸ்ட் 14ம் திகதி காலை 07:05 மணியளவில், வள்ளிபுனம் செஞ்சோலை வளாகத்தில் முகாமைத்துவ பயிர்சி நெறியை முன்னெடுத்திருந்த பாடசாலை மாணவிகள் மீது இலங்கை விமானப் படை கிபிர் விமானங்கள் தாக்குதல் மேற்கொண்டிருந்தது.
இவ் மிலேச்சத்தனமான விமானத் தாக்குதலில் 51 பாடசாலை மாணவிகள், இரு பணியாளர்கள் உட்ப்பட 53பேர் படுகொலை செய்யப்பட்டிருந்தனர்.
படுகொலை செய்யப்பட்ட மாணவிகளின் 19ம் ஆண்டு நினைவேந்தல், வள்ளிபுனம் இடைக்கட்டு - செஞ்சோலை வளாக வீதிச் சந்தியில் பிரத்தியேக கொட்டகை அமைக்கப்பட்டு பொது அமைப்புக்களால் முன்னெடுக்கப்பட்டது.
இவ் நினைவேந்தலில் உயிரிழந்த மாணவிகளின் உறவினர்கள், பொது மக்கள் மற்றும் பா.உ கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் ரவிகரன் உள்ளிட்ட அரசியற்ப் பிரமுகர்கள் என நூற்றுக் கணக்கானோர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



