இலங்கையில் வட்ஸ்அப் கணக்குகள் ஊடுருவல் அதிகரிப்பு!

இலங்கையில் வட்ஸ்அப் கணக்குகள் ஊடுருவப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருவதாக அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில், குறித்த சம்பவங்கள் தொடர்பில் 64 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக இலங்கை கணினி அவசர பதிலளிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
பல முறைப்பாடுகள் முன்வைக்கப்படாமல் இருப்பதால், உண்மையான எண்ணிக்கை மிக அதிகமாக இருக்கலாம் என்று இலங்கை கணினி அவசர பதிலளிப்பு பிரிவின் சிரேஷ்ட பொறியியலாளர் சாருக தமுனுபொல தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில், பாதிக்கப்பட்டவர்கள் தங்களின் கணக்குகளின் உரிமையை மீண்டும் பெறுவதற்காக தங்களைத் தொடர்பு கொள்ள முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். குறிப்பாக வட்ஸ்அப் கணக்குகள் ஊடுருவப்பட்டு பணத்தை கொள்ளையிடும் சம்பவங்கள் அதிகரிப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே, வட்ஸ்அப் கணக்குகளுக்கு வரும் தேவையற்ற இணைப்புகளுக்குள் பிரவேசிப்பதையும் கடவுச் சொற்களை
பகிர்வதையும் தவிர்க்குமாறு அவர் அறிவுறுத்தியுள்ளார்.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



