தமிழரசுக் கட்சியால் முன்னெடுக்கப்படும் ஹர்த்தாலை ஆதரிக்கும் மனோ கணேசன்

தமிழ் இளைஞரின் கொலையை கண்டித்து வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் நடத்தப்படவுள்ள ஹர்த்தாலை ஆதரிப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் மனோகணேசன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் : முத்தையன் கட்டு இராணுவ முகாமுக்கு தமிழ் இளைஞர்கள் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.பின்னர் இவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது. தப்பிச் சென்றவர்களில் ஒருவரான கபில் ராஜ், 09 ஆம் திகதி முல்லை முத்தையன் கட்டு குளத்தில் சடலமாக மீட்கப்பட்டு ள்ளார்.
தப்பிச் சென்ற ஏனைய நால்வர், தம்மை இராணுவத்தினர் கடுமையாக தாக்கி சித்திரவதை செய்ததாக குற்றம் சாட்டியுள்ளனர். ஆகவே என்ன நடந்தது என்பதை ஊகிப்பது கடினமானதல்ல. இந்த சம்பவத்தை அடிப்படையாக கொண்டு இலங்கை தமிழரசு கட்சி, “நீதியான விசாரணை”, “வடகிழக்கிலிருந்து மேலதிக இராணுவம் குறைப்பு” ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து வெள்ளிக்கிழமை நடத்தும் முழு அடைப்பு என்ற ஹர்த்தாலை தாம் ஆதரிக்கிறோம்.
பாதுகாப்பு அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி நுனுர குமார திசாநாயக்க, இது தொடர்பில் உடன் உரிய சட்ட நடவடிக்கை, எடுக்க வேண்டும்.
அத்துடன் இதை அடிப்படையாக கொண்டு, வடக்கு கிழக்கின் மேலதிக இராணுவ பிரசன்னத்தை உடன் குறைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.“இராணுவ பிரசன்னம் குறைப்பு” என்பதுதான் இந்த ஹர்த்தால் சொல்ல போகும் செய்தி.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



