2025 ஆம் ஆண்டின் மிகப்பெரிய விண்கல் மழை நள்ளிரவு முதல் தெரியும்!
#SriLanka
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
#meteor shower
Dhushanthini K
2 hours ago

2025 ஆம் ஆண்டின் மிகப்பெரிய விண்கல் மழை இன்று (12) நள்ளிரவு மற்றும் நாளை காலை தெரியும் என்று விண்வெளி விஞ்ஞானியும் பொறியியல் விரிவுரையாளருமான கிஹான் வீரசேகர கூறுகிறார்.
இந்த விண்கல் மழை பெர்சியஸ் விண்மீன் தொகுப்பில் ஏற்படுவதால் பெர்சியஸ் என்று பெயரிடப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
நாளை காலை 5 மணியளவில் வடக்கிலிருந்து இந்த விண்கல் மழை சிறப்பாகக் காணப்படும் என்றும் அவர் கூறினார். "இந்த விண்கல் மழையின் சிறப்பு என்னவென்றால், ஒரு மணி நேரத்தில் சுமார் 100 விண்கற்களைக் காணலாம். அது பொதுவாக ஒரு பெரிய எண்ணிக்கையாகும்.
ஒரு சில விண்கல் மழைகளில் மட்டுமே இந்த எண்ணிக்கையிலான விண்கற்களைக் காண முடியும் என்றும் அவர் மேலும் கூறினார்.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



