ஒரு இனத்தின் கலாச்சாரம் அழிந்து விட்டால் அந்த இனம் அழிந்து விடும்

#SriLanka #Switzerland #Lanka4 #SHELVAFLY #ADDAFLY
Mayoorikka
4 hours ago
ஒரு இனத்தின் கலாச்சாரம் அழிந்து விட்டால் அந்த இனம் அழிந்து விடும்

நகைஈகை இன்சொல் இகழாமை நான்கும் வகைஎன்ப வாய்மைக் குடிக்கு.

 உண்மையான உயர்குடியில் பிறந்தவர் வீட்டிற்கு வறியார் சென்ற போது முகமலர்ச்சியும், உள்ளன கொடுத்தலும், இன்சொற் சொல்லுதலும், இகழாமையும் ஆகிய இந்த நான்கு பண்புகளும் கடைப்பிடிக்கப் படவேண்டும் என்று சொல்லுவர் நூலோர். தாயைச் சந்தையில் பார்த்தபின்பு ஏன் மக்களைப் பெண்பார்க்க வீட்டுக்குப் போய்ப் பார்க்கவேண்டும் என்பது நாட்டார் வழக்கு. இல்லாரை எல்லாரும் எள்ளுவர்' ஆகலின், இகழாமையை கூறப்பட்டுள்ளது. 

வீடுதானே மானிடரின் முதலாவது பள்ளி. பெற்றோர் தானே பிள்ளைகளின் முதலாவது ஆசிரியர்கள். பிள்ளைகள் குடும்பம் என்ற அச்சில் உருக்கி ஊற்றி வார்க்கப்பட்ட வார்ப்படங்கள். இனிய குணங்கள் உண்மை பேசும் நல்ல குடும்பத்திலுள்ளவர்களுக்கே உரியன. 

 முகமலர்ச்சி, உவப்போடு கொடுக்குங் குணம், இனிய இங்கிதமான சொல் உரைத்தல், பிறரை இகழ்ந்து பேசாமை, ஆகிய நான்கும், மாறாத நல்ல குடும்பத்தில் பிறந்தவர்க்கு உரிய நற்பண்புகள் என்று சொல்லுவர். முரண்பாடோடு உட ன்பாடுடைய இன்றய சமுதாயத்தில் மானிடப்பெறுமதியை நிர்மாணித்தல் கடினம். இன்றய உலகை ஆளுமை செலுத்தும் மனிதர்களின் மனதை உண்மையாகப் பிரதிபலித்ததுதான் காச. நாரமாமிசர்களுக்கும் ஒரு நாகரிகம் இருந்தது. அவர்கள் கொன்றதைத் தின்பார்கள். கொன்றிட்ட பாவம் தின்றிடத் தீரும். உலகை ஆள்வோர் உலகம் முழுவதையும் காசவாகப் பொதுமைப்படுத்தத் துடிக்கிறார்கள்.

 உலகத்திலே மிகக் கடுமையான விடயம் பிள்ளைகளை வளர்த்து ஆளாக்குவது. அதற்கேற்ற உலக புறநிலைச் சூழல் அருகிவிட்ட து. தமிழர் கலாச்சாரம் மெண்மையானது. நல்ல குப்பிறந்தார் நால்கூந்தார் ஆனாலும் இல்லையென மாட்டார் இரந்து. கெட்டடாலும் மேன்மக்கள் மேன்மக்களே. சங்கு சுட்டாலும் வெண்மை தரும். சுடச் சுடரும் ஓ பொன்கள். 

 குயில் துன்பம் வந்த நேரத்திலும் இனிமையாகத்தான் கூவும். இல்லாள் அகத்திருக்க இல்லாததொன்றில்லை. இல்லாள் உள்ள வீட்டில் நிம்மதிக்குப் பஞ்சமில்லை. 'நகை' என்பது மனத்தின் நிறைவாக வெளிப்படும் மகிழ்ச்சியின் விளைவாக முகத்தில் காணப்படும் மலர்ச்சியைக் குறிக்கும் சொல். எல்லோரிடமும் இந்த மலர்ச்சி தோன்றுவன அல்ல. நற்குடிப்பிறந்தார் எல்லோரிடமும் நகைமுகம் காட்டுவர். அகத்தின் அழகு முகத்தில் தெரியும்.

 சிரித்தமுகத்தோடு தோன்றிப் பழகுவது இறுக்கமற்ற இதமான சூழலை உருவாக்கும். சிரித்தமுகத்தோடு தோன்றுவது ஒரு கலை. அது ஒரு கலாச்சாரம். நல்லதொரு குடும்பம் பண்பாட்டின் பல்கலைக்கழகம். ஈகை ஒரு குடும்பப் பழக்கம். தகுதியுடையார்க்கு ஈயும் குணத்தைச் சொல்வது இது. உள்ளதை ஒளிக்காமல் உதவி செய்வதைக் குறிப்பது. 

ஈகை என்பது வறியவர்க்குக்கு வழங்குவது. இக்குணம் நற்குடியில் பிறந்தவர்களிடத்தில் இயல்பாக இருப்பதாகும். இன்சொல்- பேசுவதற்கே இனியது. இன்பம் தருவது. எவரிடமும் இனிமையாகப் பேச வேண்டும். யாரிடமும் எரிந்துவிழக்கூடாது. கடுஞ்சொற்கள் கூறுவது நல்ல பண்பல்ல. இனிய சொற்களே நன்மையைத் தரும்.

 ஈடுபட்ட செயல்களில் வெற்றியை உண்டாக்கும். நகையும் ஈகையும் செயல்படுகின்ற இடத்தில் இன்சொல் தப்பாமல் காணப்படும். இனிமையான சொற்களைப் பேசுவதென்பது ஒருவருடைய உள்ளப் பாங்கினையும் வழிமுறையையும் காட்டிக்கொடுக்கும். ஒருவர் பேசும் சொற்களைக் கொண்டே அவருடைய குடிப்பிறப்பு புலப்பட்டுவிடும்.

 நல்ல குடும்பத்திலிருந்து வந்தவர்கள் எப்பொழுதும் இன்சொல்லே பேசுவர். இகழாமை மாபெரும் மனப் பலம். ஒருவரை நெஞ்சினால் இகழ்ந்திராமை, பிறரை இகழாமை, தாழ்வாகக் கருதாமை, பிறர்பழி கூறாமை என்றவாறு பொருள் பெறும். இச்சொல் யாரையும் எள்ளி நகையாடமையைக் குறிப்பது. யாரையும் எந்த நிலையிலும் இகழ்ந்து பேசிவிடக்கூடாது என்பது வாய்மைக் குடியினர்க்குரிய ஒரு தகைமை என்கிறது இப்பாடல். நகையும் இன்சொல்லும் இருந்தாலும் ஒருவரிடம் இகழ்தல் இருக்குமாயின் நன்றாகாது; ஈதல் புரிவராயினும் ஏற்பாரை கஞ்சிக்கில்லாதார், அறிவிலார் என்று இகழ்ச்சியாகக் கருதியும் கூறியும் செய்தால் அது தவறு என்பது உணர்த்தப்படுகிறது. நற்குடியிற் பிறந்தவர்களிடம் பிறரை இகழ்ந்து பேசுகின்ற கீழான குணம் காணப்படாது.

 எழுபதுகளில் யாழ்ப்பாணப் பெற்றோர் வேலையற்ற படித்த பள்ளி நீங்கிய இளைஞர்களைத் தண்டல்ச் சோறு என்று நாளாந்தம் திட்டியதும் இளைஞர்கள் இயக்கங்களுக்குப் போய் அழிந்ததற்கான ஒரு காரணம். ஒரு இனத்தின் கலாச்சாரம் அழிந்து விட்டால் அந்த இனம் அழிந்து விடும்.

தொகுப்பு. பொருள். 

 சோதிடர் சுதாகர். SWISS

லங்கா4 (Lanka4)


(வீடியோ இங்கே அழுத்தவும்)

அனுசரணை

images/content-image/1754511373.jpg


உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!