இராணுவ முகாமிற்குள் சென்ற நால்வர்: மூவர் திரும்பினர்! ஒருவர் சடலமாக மீட்பு
#SriLanka
#Mullaitivu
#Lanka4
#SHELVAFLY
#ADDAFLY
Mayoorikka
5 hours ago

முல்லைத்தீவு, முத்தையன்கட்டு இடது கரை கிராமத்தில் உள்ள இராணுவ முகாம் இரண்டு நாட்களுக்கு முன்பு அகற்றப்பட்டபோது, அப்பிரதேசத்தை சேர்ந்த இளைஞர்கள் நால்வர் சென்றுள்ளனர்.
அந்த இடத்தில் இருந்த ஒரு சிப்பாய் நான்கு கிராமத்து இளைஞர்களை உலோகக் கழிவுகளை(தகரம் ) சேகரிக்க அழைத்ததாக பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் குற்றம் சாட்டுகின்றனர்.
சிறிது நேரத்திலேயே, மற்ற சிப்பாய்கள் அந்தக் குழுவைத் தாக்கியதாக குடும்பத்தினர் குற்றம்சாட்டுகின்றனர் .
தாக்குதலுக்குள்ளான இளைஞர்கள் வெவ்வேறு திசைகளில் தப்பி ஓடிவிட்டனர், மூன்று பேர் நேற்று வீடு திரும்பினர்.
காணாமல் போன நான்காவது நபர் இன்று காலை முத்தையன்கட்டு குளத்தில் இறந்து கிடப்பதாக பாதிக்கபட்ட குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர்.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



