நைட் ஷிப்ட் வேலை...பெண்களின் உடல் மாற்றங்களும்

இரவு பணி பெண்களுக்கு சாதகமானதா? என்ற கேள்விக்கு இல்லை என்பதே பதிலாக அமைந்திருக்கிறது. இரவு பணியை தொடர்ந்து செய்து வந்தால் உடலில் என்னென்ன மாற்றங்கள் நடக்கும்? என்னென்ன பக்கவிளைவுகளை ஏற்படுத்தும் என்பது குறித்து பார்ப்போம் இன்றைய காலகட்டத்தில் ஆண்களுக்கு இணையாக பெண்கள் அனைத்து துறைகளிலும் பணிபுரிகிறார்கள்.
இரவு பணி என்றால் ஆண்கள்தான் செய்வார்கள் என்ற நிலை மாறி இரவிலும் பெண்கள் வேலை செய்ய தயாராகவே இருக்கிறார்கள். ஐ.டி. துறையை கடந்து பல இடங்களிலும் தூக்க-விழிப்பு சுழற்சிகள் சூரிய ஒளியை சார்ந்திருக்கின்றன. காலையில் சூரிய கதிர்களோ, அதன் வெளிச்சமோ உடலில் படும்போது கார்டிசோல் அளவுகள் உயர்ந்து, அன்றாட நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு உடலை உற்சாகப்படுத்தும்.
மறுபுறம் இரவில் இருள் சூழ தொடங்கியதும் மெலடோனின் ஹார்மோன் தூக்கத்திற்கு உடலை தயார்படுத்தும். பெண்கள் இரவு நேர வேலைகளில் ஈடுபடுவது கார்டிசோலை தூண்டிவிடுவதோடு மெலடோனின் உற்பத்தியை சீர்குலைத்துவிடும்.
இரவு நேர வேலை செய்பவர்களுக்கு கார்டிசோல் ஹார்மோன் அளவு அதிகமாவதாகவும், மெலடோனின் அளவு குறைவதாகவும் ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



