பிரித்தானியாவில் வீட்டின் அடியில் கண்டுபிடிக்கப்பட்ட 85 வருட பழமையான பதுங்குகுழி

பிரித்தானியாவில் தங்கள் வீட்டின் அடியில் நாஜி பதுங்குகுழி இருப்பதைக் கண்டு தம்பதியர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பிரித்தானியாவின் கெர்ன்சி (Guernsey) தீவில் உள்ள வீட்டில் ஷான் டூலியர் மாற்றும் அவரது மனைவி கரோலின் 2021 முதல் குடியிருக்கின்றனர்.
சமீபத்தில், அவர்களது வீட்டின் அடியில் இரண்டாம் உலகப்போர் காலகட்டத்தில் அமைக்கப்பட்ட நாஜி பதுங்குகுழி (Nazi Bunker) இருப்பதை கண்டுபிடித்துள்ளனர். வீட்டை புதுப்பிக்க, ஷான் தனது நண்பருடன் இணைந்து இயந்திரத்தைக் கொண்டு வீட்டின் முன்பகுதியில் தோண்டியுள்ளார்.
அப்போது நிலம் திடீரென இடிந்து விழுந்து இந்த பதுங்குகிழியின் கதவுப்பகுதி தோன்றியது. இந்த பதுங்குகுழி, 1940-45 வரை ஜேர்மன் படைகள் கெர்ன்சி தீவை ஆக்கிரமித்திருந்த காலத்தில் கட்டப்பட்டுள்ளது.
பதுங்குகுழியில் 2 பாரிய தங்கும் அறைகள் மற்றும் அவற்றை இணைக்கும் ஒரு வழியும் உள்ளது. சுவர்களில் "achtung feind hort mit" என்ற ஜேர்மன் வாசகங்கள் உள்ளன. இதன் பொருள் 'எச்சரிக்கை எதிரி கேட்டுக்கொண்டு இருக்கிறார்' என்பதாகும்.
இந்த பதுங்குகுழியை தங்கள் பிள்ளைகளுக்கான விளையாட்டு அரையாகவும், உடற்பயிற்சிக் கூடமாகவும் மாற்ற ஷான் தம்பதி ஆசைப்பட்டனர். ஆனால், இதன் வரலாற்று முக்கியத்துவத்திற்கு மதிப்பளித்து அதை அப்படியே வைத்திருக்க முடிவுசெய்துள்ளனர்.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



