சூலத்தில் எலுமிச்சை சொருகும் வழிபாடு – ஒரு சூட்சும மர்மம்!

அம்மன் கோவில்களில் சூலத்தில் எலுமிச்சை சொருகி வழிபடுவது ஏன்? அதைப் பற்றிய இதுவரை நீங்கள் அறியாத சூட்சும ரகசியங்களை இன்று இந்த பதிவில் பகிர்கிறேன்.
எலுமிச்சம் பழம் இறை வழிபாட்டில் மிக முக்கிய அங்கம் வகிக்கிறது. திருஷ்டி, தோஷ நிவர்த்தி செய்வதில் எலுமிச்சம் பழத்தின் பங்கு மிக மிக முக்கியமானது. சிவபெருமானின் கனி என்றும் எலுமிச்சம்பழம் அழைக்கப்படுகிறது.
சூட்சும காரணங்கள் :
சூலாயுதங்களில் எலுமிச்சை குத்தப்படுவதற்கு காரணம், எலுமிச்சை தேவ கனி என்று அழைக்கப்படுவதால் தான். ராகு கால துர்க்கா பூஜையில் முதலிடம் பெறுவது எலுமிச்சை ஆகும். இதனை வேறு வகையில் சொல்ல வேண்டுமென்றால் ஆயுதங்கள் அது எதுவானாலும் ரத்தம் கேட்கும்.
எனில் சூலமும் ஒரு ஆயுதம்தான். அம்மன் கோவில்களில் அந்த ஆயுதத்தால் எந்த ஒரு பலியும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக ஒரு எலுமிச்சை பழத்தை பலியாக சூலத்தில் சொருகி வைக்கும் வழக்கம் சோழர் காலம் முதற்கொண்டு வழிவழியாக இருந்து வருகிறது.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



