கிளிநொச்சியில் இளைஞர் சம்மேளனத்தால் இளைஞர் நடை பேரணி!

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தால் நிர்வகிக்கப்படுகின்ற இளைஞர் கழகங்களுக்கான 19 ஆவது தேசிய இளைஞர் சம்மேளன தெரிவானது சர்வதேச இளைஞர் தினமான எதிர் வரும் 12 ம் திகதி மதிப்புக்குரிய ஜனாதிபதி தலைமையில் சக்திவாய்ந்த தேசிய இளைஞர் சம்மேளனம் அமைக்கப்படவுள்ளது புதிய தேசிய இளைஞர் சம்மேளனத்திற்கு வாழ்த்துக்கள் தெரிவிக்கும் முகமாக இன்றய தினம் அனைத்து மாவட்ட இளைஞர் சம்மேளனத்தாலும் இளைஞர் நடப் பயண பேரணி ஏற்பாடு செய்யப்பட்டது.
இச் செயற்திட்டத்திற்கு அமைவாக கிளிநொச்சி மாவட்ட இளைஞர் சம்மேளனத்தால் போதை அற்ற உலகம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு எனும் தொனிப்பொருளில் கிளிநொச்சி மத்திய கல்லூரியில் இருந்து கிளிநொச்சி கனகபுரம் பொது மைதானம் வரை மாவட்ட இளைஞர் உத்தியோகத்தர் தலைமையில் காலை 9மணி அளவில் நடப்பயணணம் மேற்கொண்டு 11மணியளவில் நிறைவு பெற்றது.
இதன் போது இளைஞர்கள் போதைப்பொருள் பாவனைக்கு எதிராக பல பதாகைகள் ஏந்தி வீதி வழியாக நடந்தும் துவிச்சக்கர வண்டிகள் மூலமாகவும் தமது பேரணியை மேற்கொண்டனர்.
இப் பேரணியில் மாவட்ட இளைஞர்கள் மற்று பிரதேச இளைஞர் உத்தியோகத்தர்கள் மற்றும் கிளிநொச்சி மாவட்டசெஞ்சிலுவை சங்க கிளை மற்றும் பல சமூக செயற்பாட்டாளர் பங்கு கொண்டு இளைஞர்களின் பேரணியின் பலத்தை மேன்படுத்தின.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



