கிளிநொச்சியில் இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டு அமைச்சினால் தேசிய ரீதியில் விளையாட்டு வார நிகழ்வு ஆரம்பம்!!

அதற்கமைய உடற்பயிற்சி நிகழ்ச்சியானது கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.மாவட்டச்செயலக முன்றலில் ஒன்றுகூடிய உத்தியோகத்தர்கள் உடற்பயிற்சியில் ஈடுபட்டனர். மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர் மற்றும் விளையாட்டு பயிற்றுவிப்பாளர்களின் வழிப்படுத்தலில் இவ் உடற்பயிற்சி நிகழ்வில் மாவட்டச்செயலக உத்தியோகத்தர்கள் பங்கெடுத்துக்கொண்டனர்.
இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டு அமைச்சினால் தேசிய ரீதியில் விளையாட்டு வாரம் பிரகடனப்படுத்தப்பட்டது. விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சு, தேசிய ரீதியில் விளையாட்டு வாரத்தை பிரகடனப்படுத்தி, விளையாட்டு மற்றும் இளைஞர் மேம்பாட்டிற்கான பல்வேறு நிகழ்வுகளை ஏற்பாடு செய்து வருகிறது.
இந்த விளையாட்டு வாரத்தின் நோக்கம், இளைஞர்களை விளையாட்டு மற்றும் உடற்பயிற்சியில் ஈடுபடுத்துவதன் மூலம் ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்குவதாகும்.
மேலும், இந்த விளையாட்டு வாரம், தேசிய பொருளாதாரத்திற்கு இளைஞர்களின் பங்களிப்பை அதிகரிக்கும் என்பது எதிர்பார்க்கப்படுகின்ற விடயமாகும்.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



