விளையாட்டு வாரத்தையொட்டி கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற உடற்பயிற்சி நிகழ்ச்சி

#SriLanka #Kilinochchi #Event #District #sports
Prasu
4 hours ago
விளையாட்டு வாரத்தையொட்டி கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற உடற்பயிற்சி நிகழ்ச்சி

இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டு அமைச்சினால் தேசிய ரீதியில் பிரகடனமாக அறிவிக்கப்பட்ட விளையாட்டு வாரத்தையொட்டி, கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் உடற்பயிற்சி நிகழ்ச்சி சிறப்பாக இடம்பெற்றது.

மாவட்ட செயலகத்தின் முன்றலில் ஒன்றுகூடிய அதிகாரிகள் மற்றும் உத்தியோகத்தர்கள், மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர் மற்றும் பயிற்றுவிப்பாளர்களின் வழிகாட்டுதலின் கீழ், தீவிர உற்சாகத்துடன் உடற்பயிற்சியில் ஈடுபட்டனர்.

இந்நிகழ்வின் மூலம், இளைஞர்களிடையே உடற்பயிற்சி, ஒழுங்கு மற்றும் ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டதுடன், சார்பு நிலையங்களில் பணியாற்றும் அதிகாரிகளிடையிலும் உடல்நலம் பெருமளவில் ஊக்குவிக்கப்பட்டது.

images/content-image/1754418373.jpg

விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த விளையாட்டு வாரத்தின் முக்கிய நோக்கம், இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரையும் உடற்பயிற்சி மற்றும் விளையாட்டில் ஈடுபடச் செய்து, ஒரு ஆரோக்கிய சமூகத்தை உருவாக்குவதாகும்.

மேலும், இவ் வாரத்தின் வாயிலாக, தேசிய மட்டத்தில் இளைஞர்களின் திறமைகள் வெளிக்கொணரப்பட்டு, அவர்கள் பொருளாதார வளர்ச்சியில் பங்கு வகிக்கும் முனைப்பையும் மேம்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிகழ்வில் பங்கேற்ற அனைவரும் ஆர்வமுடன் கலந்து கொண்டதுடன், நிகழ்வு வெற்றிகரமாக நிறைவடைந்தது.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே அழுத்தவும்)

அனுசரணை


images/content-image/1754417079.jpg

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!