காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பங்களுக்கு நீதி, நம்பிக்கையை கட்டியெழுப்ப ஐ.நா. தயார்!

பாதிக்கப்பட்டவர்களை மையமாகக் கொண்டு, நம்பிக்கையை கட்டியெழுப்புவதற்கும், மீண்டும் நிகழாமையை உறுதி செய்வதற்கும் உண்மை, நீதி, இழப்பீடுகள் உட்பட காணாமல் போனோரின் குடும்பங்களின் உரிமைகளை மேம்படுத்தும் முயற்சிகளுக்கு ஆதரவளிக்க ஐ.நா. தயாராக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
செம்மணி மற்றும் கொக்குத்தொடுவாய் கூட்டுப் புதைகுழி தளங்களில் இருந்து மீட்கப்பட்ட தனிப்பட்ட உடைமைகளை அடையாளம் காண்பதில் பொதுமக்களின் உதவியை நாடும் தீர்மானம், இலங்கையில் உண்மை, நீதி மற்றும் நல்லிணக்கத்தை நோக்கிய எதிர்பார்க்கப்பட்ட ஒரு நடவடிக்கையாகும்.
பல தசாப்தங்களாக தங்கள் உறவுகளைத் தேடி வரும் காணாமல் போனவர்களின் குடும்பங்களுடன் ஐக்கிய நாடுகள் இலங்கை உறுதியாக நிற்கிறது.
இலங்கை அரசாங்கம், குறிப்பாக காணாமல் போனோர் அலுவலகம், தங்கள் பணியை வெளிப்படைத்தன்மையுடனும், விரைவுடனும்இ காணாமல் போனவர்களின் குடும்பங்களுடன் அர்த்தமுள்ள ஆலோசனையுடனும் நிறைவேற்ற வேண்டும் என்று ஜ.நா வலியுறுத்துவதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



