கிளிநொச்சியின் புதிய பொலிஸ் அத்தியட்சகர் – ஜெயசாந்த டீ சில்வா கடமையேற்பு!
#SriLanka
#Police
#ADDA
#ADDAADS
#SHELVAFLY
#ADDAFLY
#ADDAPOOJA
Lanka4
2 hours ago

கிளிநொச்சி பிராந்தியத்தின் பொலிஸ் பாதுகாப்பு மற்றும் சட்ட ஒழுங்கு பொறுப்புகளை ஏற்கும் வகையில், சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜெயசாந்த டீ சில்வா நேற்று (04.08.2025) தனது புதிய கடமைகளை இரணைமடு அலுவலகத்தில் காலை 11 மணிக்கு அதிகாரபூர்வமாக பொறுப்பேற்றுக் கொண்டார்.
முன்னதாக இப்பொறுப்பை வகித்த சிசிர பெத்தர தந்திரி, கொழும்பு தலைமையகத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, ஜெயசாந்த டீ சில்வா இந்த பதவிக்காக நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர் இதற்கு முன்னர் கொழும்பு தெற்கு பிராந்திய பொலிஸ் அத்தியட்சகராக கடமையாற்றினார். மேலும், 2017-ஆம் ஆண்டில் கிளிநொச்சி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாகவும் பணியாற்றிய அனுபவம் அவருக்கு உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



