இங்கிலாந்தில் சகோதரியின் மகள்களை காப்பாற்ற முயன்ற இலங்கை தமிழர் மரணம்

இங்கிலாந்தில் நீழ்வீழ்ச்சிக்குள் விழுந்த சகோதரியின் மகள்களைக் காப்பாற்ற முயன்ற இலங்கை தமிழ் இளைஞன் ஒருவர் உயிரிழந்த சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் துயரச் சம்பவம் இங்கிலாந்தின் வேல்ஸ் Swanseaயில் நடந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், வேல்ஸ் Swanseaயில் வசித்து வந்த 27 வயதான மோகனநீதன் முருகானந்தராஜா என்பவரே உயிரிழந்துள்ளார்.
இளைஞர் தன் உறவினர்களுடன் Swanseaயில் உள்ள Brecon Beacons என்னுமிடத்துக்குச் சென்றுள்ளார். அங்கு சென்ற அவரது குடும்பத்தினர் பலர் அங்குள்ள நீர்வீழ்ச்சியில் விளையாடிக் கொண்டிருந்தனர்.
விளையாடிய சிறிது நேரத்தில் இளைஞரின் சகோதரியின் மகள்கள் இருவர் தண்ணீரில் தத்தளித்துள்ளனர். அவர்களைக் காப்பாற்ற உடனே இளைஞன் நீர்வீழ்ச்சிக்குள் குதித்துள்ளார். தன் சகோதரியின் மகள்கள் இருவரையும் தண்ணீரில் தத்தளித்த மற்ற உறவினர்களையும் மீட்டு கரை சேர்த்த பின்னர் இளைஞன் தவறுதலாக தண்ணீரில் சிக்கிக்கொண்டார்.
நீர்வீழ்ச்சிக்குள் சிக்கிக் கொண்ட இளைஞனை மீட்கும் முயற்சியில் மீட்புக் குழுவினர் தேடுதல் நடத்திய நிலையில், மறுநாள் இளைஞனை மீட்புக்குழுவினர் சடலமாக மீட்டதாக கூறப்படுகின்றது.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



