கிளிநொச்சி பொலிஸாரின் அறிவித்தல் !!!

கிளிநொச்சி நகரப் பகுதியில் கனரக வாகனம் செலுத்துவோருக்கு பாடசாலை ஆரம்ப, முடிவு நேரம் குறித்து விசேட அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. பாடசாலை ஆரம்ப நேரமான காலை 6.40 தொடக்கம் 7.30 மணி வரையும், பாடசாலை முடிவுறும் நேரமான 1.30 தொடக்கம் 2.00 மணி வரையும் கிளிநொச்சி நகர பகுதிகளுக்குள் கனரக வாகனங்கள் அனுமதிக்கப்பட மாட்டாது.
கிளிநொச்சி பொலிஸார் இந்த அறிவிப்பை விடுத்துள்ள நிலையில் பாடசாலை நாட்களில் இது நடைமுறையில் இருக்கும் என குறிப்பிட்டுள்ளனர்.
பாடசாலை மாணவர்களின் நலன் கருதி பாடசாலை மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் போக்குவரத்தை மேற்கொள்வதற்காக கிளிநொச்சி பொலிஸார் மனித நேய அடிப்படையில் இந்த நடவடிக்கையை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் தொடர்ந்து ஏற்படும் விபத்துக்களை தவிரப்பதற்காக இவ்வாறான நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



