கிளிநொச்சியில் இந்தியாவிலிருந்து மீளத்திரும்பியவர்களுக்கு உதவித் தொகை வழங்கும் நிகழ்வு!

இந்தியாவிலிருந்து மீளத் திரும்பியவர்களின் சுமூகமான மீள் ஒருங்கிணைப்பிற்கான உதவித் தொகையானது கிளிநொச்சி மாவட்ட பதில் அரசாங்க அதிபர் S.முரளிதரன் அவர்களினால் அரசாங்க அதிபர் அலுவலகத்தில் வைத்து வழங்கப்பட்டது.
(28-Jul-2025) இந் நிகழ்வில் OfERR (Ceylon) மாவட்ட திட்ட இணைப்பாளர் சிவகுமார் மற்றும் உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர். இந் நிகழ்வின் போது இந்தியாவிலிருந்து மீளத் திரும்பியவர்களுடன் அவர்களின் வாழ்வாதாரம் மற்றும் கல்வி தொடர்பாகவும் அவர்கள் எதிர்பார்க்கின்ற தேவைகள் தொடர்பாகவும் அரசாங்க அதிபர் கலந்துரையாடினார்.
இச் செயற்திட்டத்திற்காக
UNHCR நிறுவனமானது OfERR (Ceylon) நிறுவனத்தின் ஊடாக இதற்கான உதவித்தொகையினை பயனர்களுக்கு வழங்கிவருகின்றது.
குடும்ப உறுப்பினர் ஒருவருக்கு தலா ரூபா 90,000 வீதம் பிரதேச செயலக பிரிவு ரீதியாக கொடுப்பனவு வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



