பெண்கள் இதய நோய்களால் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள்.... ஏன் ?

#Health #Heart Attack
Lanka4
4 weeks ago
பெண்கள்  இதய நோய்களால் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள்.... ஏன் ?

இந்தியா, பிரேசில், சீனா, எகிப்து, அரபு நாடுகள் மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட 50 நாடுகளில் இருந்து பெறப்பட்ட 15 ஆய்வு முடிவுகளின் அறிக்கை, அதிர்ச்சித் தகவல் வெளியாகி மருத்துவ இதழ் ஒன்றில் வெளியிடப்பட்டுள்ளது. இதயநோய் அறிகுறிகளை கண்டறிதல், சிகிச்சை ஆகியவற்றில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையேயான வித்தியாசம் பிரமிக்க வைக்கும் அளவுக்கு பெரிதாக உள்ளது. அறிகுறிகள் தோன்றிய பிறகு ஆண்களை விட பெண்கள் தாமதமாகவே மருத்துவமனையை அணுகுகின்றனர்.

ஆண்களுக்கு நிகரான விகிதத்தில் மருத்துவமனையில் பெண்கள் அனுமதிக்கப்படுவதில்லை 23 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்களிடம் இருந்து பெறப்பட்ட தகவலின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட இந்த ஆய்வறிக்கையில், ஆண்களை விட பெண்களே மோசமான இதய நோயால் அதிகளவில் பாதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 இதுமட்டுமின்றி, இளம் வயது பெண்களிடம் மாரடைப்பு விகிதம் அதிகரித்து வருவதையும் இந்த ஆய்வு சுட்டிக்காட்டி உள்ளது. கடந்த 1995-2014-க்கு இடைப்பட்ட காலத்தில், 35 வயது முதல் 54 வயதுடைய பெண்களிடையே மாரடைப்பு விகிதம் 21 சதவீதத்தில் இருந்து 31 சதவீதமாக அதிகரித்துள்ளது. இதுவே ஆண்களுக்கான விகிதம் 30 சதவீதத்தில் இருந்து 33 சதவீ மாக உயர்ந்துள்ளது. பெண்கள் ஆண்டுதோறும் உடல் பரிசோதனை செய்து, தங்கள் உடல்நலனை கவனத்தில் எடுக்க வேண்டும்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே அழுத்தவும்)

அனுசரணை

images/content-image/1753774273.jpg


உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!