ஊவா மாகாணத்தின் பிரதம செயலாளராக பி.ஏ.ஜி.பெர்னாண்டோ நியமனம்!
#SriLanka
#Province
#Secretary
#ADDAADS
#SHELVAFLY
#ADDAFLY
#ADDAPOOJA
Soruban
4 months ago
பி.ஏ.ஜி. பெர்னாண்டோ ஊவா மாகாணத்தின் பிரதம செயலாளராக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் நியமிக்கப்பட்டுள்ளார். உடன் அமுலுக்கு வரும் வகையில் குறித்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான நியமனக் கடிதத்தை ஜனாதிபதியின் செயலாளர் நந்திக சனத் குமாநாயக்க இன்று (28) காலை ஜனாதிபதி செயலகத்தில் வைத்து அவரிடம் கையளித்தார்.
இலங்கை நிர்வாக சேவையின் விசேட தர அதிகாரியான பி.ஏ.ஜி. பெர்னாண்டோ, முன்னதாக மேல் மாகாணக் கல்வி, கலாச்சார மற்றும் கலை விவகாரங்கள், விளையாட்டு மற்றும் இளைஞர் விவகாரங்கள் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சின் செயலாளராகப் பணியாற்றியுள்ளார்.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை
