பிரித்தானிய பிரதமரின் வீட்டிற்கு அருகே பாலஸ்தீன ஆதரவாளர்கள் போராட்டம்

பிரித்தானிய பிரதமரின் இல்லத்திற்கு அருகே நூற்றுக்கணக்கான பாலஸ்தீன ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
காசாவில் உணவு பெற காத்திருந்த நிலையில் பலர் இஸ்ரேல் ராணுவத்தால் சுட்டுக்கொல்லப்பட்டதை கண்டித்து, இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
பாத்திரங்கள் மற்றும் வாத்தியங்களுடன் வந்த ஆர்ப்பாட்டக்காரர்கள், “பாலஸ்தீனத்தில் நடைபெறும் மனிதாபிமான பேரழிவுக்கு பிரித்தானிய அரசு மௌனமாக இருப்பதை ஏற்க முடியாது” எனக் கோஷமிட்டனர்.
கடந்த இரண்டு மாதங்களில் மட்டும், உணவுக்காக நிவாரண முகாம்களுக்கு வந்திருந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் இஸ்ரேல் ராணுவத்தால் சுட்டுக்கொல்லப்பட்டதாக ஐக்கிய நாடுகள் அமைப்பு தெரிவித்துள்ளது.
மேலும், கடந்த இரண்டு வாரங்களில் கடுமையான ஊட்டச்சத்து குறைபாடால் பாதிக்கப்பட்ட 5,000 குழந்தைகள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் ஐ.நா. தகவல் தெரிவித்துள்ளது.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



