காதில் ஏற்படும் பாதிப்பு!

ஐம்புலன்களில் ஒன்றான காது, கேட்பதற்கு மட்டுமல்ல நம் உடலைச் சமநிலையில் வைத்திருப்பதற்கும் உதவுகிறது.
அந்த அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்த காது குறித்த அக்கறையும் அதைப் பற்றிய அடிப்படைப் புரிதலும் இந்த ஸ்மார்ட்போன் உலகத்தில் இருக்கிறதா என்பது சந்தேகத்துக்குரிய விஷயமே! இப்படி நம் செயல்பாடுகளாலோ, மரபியல் காரணங்களாலோ சாதாரணமாக காதுவலி என ஆரம்பித்து, காது கேளாமை வரையிலும் பிரச்னைகள் நீளும் அபாயம் இருக்கிறது எச்சரிக்கிற காது, மூக்கு மற்றும் தொண்டை சிகிச்சை நிபுணர் நீரஜ் ஜோஷி, காதுகளில் வரக்கூடிய பிரச்னைகள், காது கேளாமைக்கான காரணங்கள், சொட்டுமருந்து, எண்ணெய் போன்றவற்றை காதில்விடுவது சரியா, காது கேளாமையைச் சரி செய்வதற்கான சிகிச்சைகள் என்னென்ன, காதுகளைப் பாதுகாக்கச் செய்ய வேண்டியவை என விரிவாக பேசியிருக்கிறார்.
காதில் என்னென்ன பிரச்னைகள் ஏற்படும்?
காது நோய்களில் முதன்மையானது, காதுவலி. பொதுவாக, காதுவலிக்குக் கீழ்க்கண்ட காரணங்கள் சொல்லப்படுகின்றன. காதில் கொப்பளம் தோன்றுவது, சீழ் வடிவது, அழுக்கு அடைத்துக்கொள்வது, பூச்சி புகுவது, காதில் அடிபடுவது போன்றவை முக்கியமானவை.
இவற்றோடு, மூக்கில் சளி பிடிப்பது, மூக்கு ஒழுகுவது போன்ற மூக்குப் பிரச்னைகளால்கூட காதுவலி வரும். தொண்டையில் சளி பிடித்துப் புண் உண்டாவது, டான்சில் வீங்குவது போன்றவையும் காதுவலிக்குக் கம்பளம் விரிக்கும்.
காதுவலிக்கான காரணத்தைக் கண்டறிந்து சரியான சிகிச்சை பெற்றால் குணம் பெறலாம். குறிப்பாகக் காதில் சீழ் வடிந்தால், கேட்கும் திறன் பாதிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம்.
அதனால், ஆரம்பத்திலேயே, இதற்குச் சிகிச்சை பெறவேண்டியது அவசியம். அதேபோல், காதிலுள்ள அழுக்கைச் சுத்தம் செய்கிறேன்’ எனக் கூரான ஆயுதங்களை உபயோகிப்பது ஆபத்தில் முடியும். நம் காதுக்குள் `செரிமோனியஸ் சுரப்பிகள்’ (Ceremonious Glands) உள்ளன.
இவைதான் காதுக்குள் ஒருவிதத் திரவத்தைச் சுரந்து, மெழுகுப் படலத்தை உருவாக்கி, செவிப்பறையைப் பாதுகாக்கின்றன.
காதுக்குள் நுழையும் பூச்சிகள், அழுக்குகள், பொருள்கள் போன்றவை செவிப்பறையைப் பாதித்துவிடாதபடித் தடுப்பது, இந்த மெழுகுதான். இதை அகற்றவேண்டிய அவசியமில்லை. தானாகவே இது வெளியில் வந்துவிடும்.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



